இந்த வார குமுதம் இவ்வளவு நாள் நான் கேட்கும்போதெல்லாம் மெய்மறக்கும் ஒரு தெய்வீக குரலுக்கு முகம் கொடுத்துள்ளது...
ஜென்சி...
'சில்லிட வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வருவதுபோல் இருக்கும்.ஜென்சியின் குரல்.'
எவ்வளவு சத்தியமான வார்த்தை..
`தம்தன தம்தன... தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', ‘மீன் கொடித் தேரில்'.
எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.... இவர் அதிகம் பாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் நாம் நிறைய இழந்துவிட்டோம்!! ஆனாலும் இதுவரை நமக்கு கிடைத்தது எல்லாம் பொக்கிஷங்கள்..
என்னிடம் இவரது பெரும்பான்யானப் பாடல்கள் இருக்கின்றன.. ஆனால் எப்படி இந்த வளைத்தளத்தில் பகிர்ந்துகொள்வது என்று தெரியாததால்..odeo.com வளைத்தளத்தில் கிடைத்த ஒரு தொகுப்பை இங்கு கொடுத்துள்ளேன்.. கேட்டு மகிழுங்கள்!!!
ஜென்சி பாடிய அனைத்துத் தமிழ் பாடல்களும் ஒரு தொகுப்பாக..
(நன்றி: ப்ரசன்னா)
கிடைத்தப் பாடல்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.. சொடுக்கிக் கேட்டு மகிழுங்கள்..
மயிலே..மயிலே.. (கடவுள் அமைத்த மேடை )
மீன்கொடித் தேரில்..(கரும்புவில்)
என் வானிலே.. ஒரே வெண்ணிலா...(ஜானி)
ஒரு இனிய மனது... (ஜானி)
ஆயிரம் மலர்களே.. மலருங்கள்.. (நிறம் மாறாத பூக்கள்)
இரு பறவைகள் மலை முழுவதும்.. ,
இதயம்... போகுதே..,
தம்தன..தம்தன.. தாளம் வரும்.. (புதிய வார்ப்புகள்)
காதல் ஓவியம்... (அலைகள் ஓய்வதில்லை)
தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாசப் பறவைகள்)
அடிப் பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..(முள்ளும் மலரும்)
கல்யாணம் என்னை முடிக்க.. (மெட்டி)
தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)
வாடா என் ராஜாக்கண்ணா.. (ரிஷிமூலம்)
ஆத்தோர காத்தாட.. (எங்கேயோ கேட்ட குரல்)
உனக்கென தானே... (பொண்ணு ஊருக்குப் புதுசு)
கீதா..சங்கீதா... (அன்பே சங்கீதா)
தேவன் திருச்சபை மலர்களே (அவர் எனக்கே சொந்தம்)
பனியும் நீயே..மலரும் நானே.. (பனிமலர்)
ஞான் ஞான் ஆடணும்.. (மலையாளம்) (பூந்தளிர்)
பூ மலர்ந்திட.. (டிக் டிக் டிக்)
வாடி என் கப்பக் கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
ஆடச் சொன்னாரே (வட்டத்துக்குள் சதுரம்)
வானத்துப்பூங்கிளி.. (திரிபுர சுந்தரி)
தோட்டம் கொண்ட ராசவே (பகலில் ஓர் இரவு)
அக்கா..ஒரு ராஜாத்தி (முகத்தில் முகம் பார்க்கலாம்)
நான் உன்னைத் திரும்ப திரும்ப.. (எல்லாம் உன் கைராசி)
காத்தாடுது ஆசை கூத்தாடுது (கரடி)
என் கானம் இன்று அரங்கேறும் (ஈர விழிக் கனவுகள்)
மணியோசைக் கேட்டதா.. (இருளும் ஒளியும்)
Friday, August 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
நானும் மிகவும் விரும்பி வாசித்தேன். உண்மையிலேயே தெய்வீக ராகம்; தெவிட்டாத பாடல். இப்போதும் பாடும் விருப்பத்தில் உள்ளார். என்ன செய்கிறார்கள் இந்த இசையமைப்பாளர்கள்?
இன்று இந்த விஷயத்தை பற்றி எழுத வேண்டும் என்று இணைத்திருந்தேன்.நீங்கள் எழுதி விட்டீர்கள் .ஜானி பட பாடல் என்னுடைய favourite.
இளையராஜா ஏன் இவரை திரும்பவும் அழைக்கவில்லை????
மற்ற இசை அமைப்பாளர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது என்??
என் மகனின் பெயரும் சூர்யா தான்
Sathananthan:
//இப்போதும் பாடும் விருப்பத்தில் உள்ளார். என்ன செய்கிறார்கள் இந்த இசையமைப்பாளர்கள்?
//
பாபு:
//மற்ற இசை அமைப்பாளர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது என்??
//
நமது தலைமுறை ஜென்சியின் குரலையும், இளயராஜாவின் இசையையும் ரசிக்கும் அளவிற்கு இந்தத் தலைமுறையின் ரசனை இல்லை என்றே சொல்லலாம். அமெரிக்க இசையின் தாக்கம் அளவிற்கு அதிகம் நம் நாட்டில் உள்ளது. ராக், ஹிப்-ஹாப் போன்ற இசைகள் மெலடிகளை கொஞ்சம் நசுக்கி விட்டது என்றும் சொல்லலாம். குரலுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஜென்சி மறுபடியும் வந்து பாடினாலும் இப்போதய இசையின் சத்தம் அவரது குரலை அமுக்கிவிடும்.
ஜென்சி அவர்களின் விளக்கத்தின் படி பார்த்தால், அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அவரும் பாடுவதற்கு அவ்வளவு முயற்சி எடுக்கவில்லை என்றேத் தோன்றுகிறது.
//பாபு:
என் மகனின் பெயரும் சூர்யா தான்//
மிக அருமையானப் பெயர்!!! ரொம்ப நன்றாக வருவான் உங்கள் சூர்யா!!
வாழ்த்துக்கள்!
நானும் படிச்சேன் அவங்க மறுபடியும் பாட விரும்புகையில் அந்த சந்தர்ப்பம் நழுவிப்போன கஷ்டத்தையும் சொல்லி இருந்தாங்க..
அவர் பாடின அனேகம் பாடல்கள் அருமையானவை...
எனக்கும் இவரது பாடல்கள் மிகவும் பிடிக்கும். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகப்பரந்தளவில் பேசப்பட்டன.
இப்பேட்டியைக் குமுதத்தில் கண்டு மகிழ்ந்தேன். நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டேன்.
நடிகை த்ரிஷாவுக்குப் பாட வாய்ப்புக் கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் நல்ல குரல்வளமும் திறமையும் கொண்ட இவருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.
இவரது பாடல்களை நள்ளிரவில் மெல்லிசையில் கேட்கவேண்டும். மிக அருமை !
நமது தலைமுறை ஜென்சியின் குரலையும், இளயராஜாவின் இசையையும் ரசிக்கும் அளவிற்கு இந்தத் தலைமுறையின் ரசனை இல்லை என்றே சொல்லலாம்.
நான் அப்படி நினைக்கவில்லை. இன்றும் ஸ்ரேயா கோஷலின் மெலடியை ரசிப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. மொழி பாட்டுக்கள் நன்றாகத்தான் வரவேற்கப்பட்டது. இளங்காத்து வீசுதே தாலாட்டுகிறது. இவற்றையெல்லாம் ரசிப்பவர்கள் நிச்சயம் ஜென்சியை வரவேற்பார்கள். புலம்பெயர்ந்தும் எனது மகள் தமிழை ரசிக்க வைப்பது பாடல்கள் தான்.
இசையமைப்பாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழன்:
//அவர் பாடின அனேகம் பாடல்கள் அருமையானவை...//
ஆமாங்க...அந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் இன்னும் நிறையப் பாடல்கள் கிடைத்திருக்கும்.
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி
//எம்.ரிஷான் ஷெரீப் said...
இவரது பாடல்களை நள்ளிரவில் மெல்லிசையில் கேட்கவேண்டும். மிக அருமை !
//
உண்மை.. தாலாட்டவைக்கும் பாடல்கள்..
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி
//புலம்பெயர்ந்தும் எனது மகள் தமிழை ரசிக்க வைப்பது பாடல்கள் தான். //
இது ஒரு நற்செய்தி. இன்னும் நல்ல உச்சரிப்புடன் பாடகர்கள் பாடும் போது தமிழ்ப் பாடல்கள் இன்னும் இனிமை பெறும்.
நிஜமாவே நல்ல பாடகி, ஏனோ நிறைய பேருக்கு இவரை தெரிவதில்லை. மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு நன்றி :)
கயல்விழி,
நன்றியெல்லாம் எதுக்குங்க..
”யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” அப்படின்னு சொல்லறதுக்கேற்ப.. எனக்குப் புடிச்சத எல்லொருகிட்டயும் பகிர்ந்துக்கிறேன் அவ்வளவுதான்...
வருகைக்கு நன்றிங்க..
ஜென்ஸி எனக்கு மிக மிக மிகப் பிடித்த பாடகி. அவர் பாடிய பாடல்களை நான் கேட்காத நாளே இல்லை.
நான் பதிவெழுத துவங்கிய போது என்னால் முடிந்த அளவு அவர் பாடிய பாடல்களின் விவரத்தை சேகரித்தேன். இங்கே வந்து பாருங்கள்.
http://tcsprasan.blogspot.com/2006/12/list-of-songs-by-my-all-time-favorite.html
ஒவ்வொன்றும் ஒரு முத்து.
மிகவும் நன்றி ப்ரசன்னா..
உங்கள் தொகுப்பைத் தமிழாக்கம் செய்து இங்கே பதித்திருக்கிறேன்..
மிக்க நன்றி சூர்யா, என்னைப்போன்ற இளையராஜா பிரியனுக்கு இவரின் குரலில் பாடல் கேட்பது இன்னும் சுகம்.
இந்த பதிவில் இளையராஜா பற்றி ஒரு லின்க் இருக்கு முடிஞ்சா பாருங்க.
http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_20.html
சூர்யா தங்கள் தளத்திற்கு என் முதல் வருகை.. முதல் ஆச்சரியம் நீங்கள் நம்மசாதி(இளையராசா), இரண்டாவது ஒரே மாதிரி வார்ப்புரு...
அடுத்தது ஜென்சி பற்றிய பதிவு..
சூப்பர் தலை... அதில் ஓரிரண்டு பாடல்கள் நான் கேட்கவில்லை.. கேட்டு விடுகிறேன்...
//தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)//
அருமையான ஆனால் அதிகம் கேட்காத பாடல்..அதில் சரணம் கேட்கையில் மூன்றாவது அல்லது நான்காவது வரிகள் வேறொரு ஹிட் பாடலை நினைவூட்டியது... முடிந்தால் கூர்ந்து கேட்டுச் சொல்லுங்களேன்...
//ஒரு இனிய மனது... (ஜானி)// இந்தப் பாடல் சுஜாதா பாடியது என நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்களேன்...
its for mail follow up...
that 'odeo' link is not working .. please check
குடுகுடுப்பை,
தொடுப்புக்கு நன்றி. அதில் நிறய பயனுள்ள mp3 -க்கள் இருந்தன..
தமிழ்ப்பறவை said...
//சூர்யா தங்கள் தளத்திற்கு என் முதல் வருகை.. //
வாங்க..வாங்க.. வணக்கங்க.. !
ஒருதடவை வரதோட நிறுத்திக்காதிங்க.. அடிக்கடி வாங்க..!
//முதல் ஆச்சரியம் நீங்கள் நம்மசாதி(இளையராசா)//
எனக்கு தெரிஞ்சு நம்ம தலமுறைல ராசாவின் பாடல்களை பிடிக்காதவர்கள் யாரும் இல்லைங்க..
//இரண்டாவது ஒரே மாதிரி வார்ப்புரு...//
புரியலீங்களே..?
//தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)//
//அருமையான ஆனால் அதிகம் கேட்காத பாடல்..அதில் சரணம் கேட்கையில் மூன்றாவது அல்லது நான்காவது வரிகள் வேறொரு ஹிட் பாடலை நினைவூட்டியது... முடிந்தால் கூர்ந்து கேட்டுச் சொல்லுங்களேன்...//
நானும் இந்தப் பாடலை எப்போதோ கேட்டிருக்கிறேன். தற்போது கேட்டதில்லை.. உங்களிடம் அந்தப் பாடல் இருக்குதுங்களா?
//ஒரு இனிய மனது... (ஜானி)// //இந்தப் பாடல் சுஜாதா பாடியது என நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்களேன்...//
raaga போன்ற தளங்களில், ஜென்சி என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அப்புறம் சுஜாதா புதிய பாடகி இல்லையா?
தமிழ்ப்பறவை said...
//that 'odeo' link is not working .. please check//
தற்போது வேலை செய்கிறது. மீண்டும் முயற்சித்துப் பாருங்களேன்..
'வார்ப்புரு' என்றால் 'டெம்ப்ளேட்' ஐக் குறிப்பிட்டேன்...('வார்ப்புரு சரியா, தவறா தெரியவில்லை..நான் குறிப்பிட நினைத்தது டெம்ப்லேட்ஐ)
சுஜாதா பழைய பாடகி.. பதின் வயதுகளிலேயே ராஜாவின் இசையில் பாடியவர்..இந்தத் தொடுப்பில் பாருங்கள் http://www.sujatha.in
தங்கள் மெயில் ஐ.டி தாருங்கள்.. 'தைப்பொங்கல்' பாடல் அனுப்புகிறேன்...
எனது ஐ.டி. thamizhparavai@gmail.com
அடிக்கடி தங்கள் பக்கம் வருவேன்...
இப்பதிவுடன் தொடர்பில்லாத ஒரு விஷயம் கூற விழைகிறேன்..'குப்பை' எனும் வலைப்பூவில் 'கற்றது தமிழ்' படத்தைப் பற்றிய தங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு காட்சியை மட்டும் வைத்து படத்தை எடை போடாதீர்கள்..
கதையின் கருத்து எப்படியோ, படமாக்கிய விதம், ஒளிப்பதிவு, இசை எனப் பல விஷயங்கள் உள்ளன..
படத்துக்கான எதிர்வினைகள் வலைப்பூவில் தீவிரமாக இருந்தது.. காரனம் உங்களுக்கே தெரியும்...
முடிந்தால் மூன்று ம்ணி நேரம் செலவழித்துப் படம் பாருங்கள்( எந்த விமர்சனத்தையும் நினைத்துப்பாராமல்) பின்பு நீங்கள் விமர்சியுங்கள் படம் குப்பையா இல்லை மோசமான குப்பையா எதுவாயினும் தெரிவியுங்கள்..
ஒரு நண்பராகக் கூறுகிறேன்.. பின் படம் பார்ப்பதும், பார்க்காததும், படம் உங்களுக்குப் பிடிப்பதும்,பிடிக்காததும் வேறு விஷயம்..
in that 'sujatha page', no information about that particular song.. im searching and i will give..
தமிழ்ப்பறவை said...
//'வார்ப்புரு' என்றால் 'டெம்ப்ளேட்' ஐக் குறிப்பிட்டேன்...//
ஒரு புதிய தமிழ் வார்த்தையை உங்களால் கற்றுக்கொண்டேன். நன்றி!
//சுஜாதா பழைய பாடகி.. பதின் வயதுகளிலேயே ராஜாவின் இசையில் பாடியவர்..இந்தத் தொடுப்பில் பாருங்கள் http://www.sujatha.in //
விளக்கத்திற்கு நன்றி.. சுஜாதா அப்போதிருந்தே பாடிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு ஒரு செய்தி!! மீண்டும் நன்றி.
//தங்கள் மெயில் ஐ.டி தாருங்கள்.. 'தைப்பொங்கல்' பாடல் அனுப்புகிறேன்...
எனது ஐ.டி. thamizhparavai@gmail.com//
உங்களுக்கு chummafun@yahoo.com - மிலிருந்து ஒரு மின்மடல் அனுப்பியுள்ளேன்.. பாடலை அனுப்புங்கள்..
//முடிந்தால் மூன்று ம்ணி நேரம் செலவழித்துப் படம் பாருங்கள்( எந்த விமர்சனத்தையும் நினைத்துப்பாராமல்) பின்பு நீங்கள் விமர்சியுங்கள் படம் குப்பையா இல்லை மோசமான குப்பையா எதுவாயினும் தெரிவியுங்கள்..//
கண்டிப்பாகப் பார்க்கிறேன்.. முடிந்தால் ஒரு பதிவு எழுதுகிறேன் படம் பார்த்தப் பிறகு.
நன்றி
தமிழ்ப்பறவை said...
//in that 'sujatha page', no information about that particular song.. im searching and i will give..//
நன்றி!!
நல்ல பாடல்களின் தொகுப்பு அண்ணா..!! :))
Sri said...
//நல்ல பாடல்களின் தொகுப்பு அண்ணா..!! :))//
மிக்க நன்றி தங்கச்சி!
ஜென்சி மிக நல்ல பாடகி. இவர் பாடிய பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். உச்சரிப்பு முன்னப்பின்ன இருந்தாலும் மிகநல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய பாடல்களைத் தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.
ஒரு சிறிய திருத்தம். உங்கள் ஒலிச்சேர்க்கையில் முதலாகக் கொடுக்கப் பட்டிருக்கும் விழியில் விழுந்து பாடலைப் பாடியவர் பி.எஸ்.சசிரேகா. அந்தப் பாடலை இந்தச் சேர்க்கையிலிருந்து எடுத்து விடுங்கள்.
G.Ragavan said...
//ஒரு சிறிய திருத்தம். உங்கள் ஒலிச்சேர்க்கையில் முதலாகக் கொடுக்கப் பட்டிருக்கும் விழியில் விழுந்து பாடலைப் பாடியவர் பி.எஸ்.சசிரேகா. அந்தப் பாடலை இந்தச் சேர்க்கையிலிருந்து எடுத்து விடுங்கள்.//
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பாடலை தொகுப்பிலிருந்து எடுத்து விட்டேன்.
வருகைக்கு நன்றி.
ஜென்சி ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உதிரிப் பூக்கள் மகேந்திரனின் மகனின் இயக்கத்தில் வரும் படத்தில் பாடப்போவதாக எனது நண்பி ஒருவர் கூறினார்; ஏதோ இணையத் தளத்தில் வந்ததாக. எந்தத் தளம் என்பது தெரியவில்லை..
ஆவலாகக் காத்திருக்கிறேன்.
Sathananthan said...
//ஜென்சி ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உதிரிப் பூக்கள் மகேந்திரனின் மகனின் இயக்கத்தில் வரும் படத்தில் பாடப்போவதாக எனது நண்பி ஒருவர் கூறினார்; ஏதோ இணையத் தளத்தில் வந்ததாக. எந்தத் தளம் என்பது தெரியவில்லை..
ஆவலாகக் காத்திருக்கிறேன்.//
தகவலுக்கு மிக்க நன்றி. நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
ஜென்சி நல்ல பாடகிதான். ஆனால் சில நல்ல பாடகர்கள் இப்படித்தான் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போயிடுறாங்க. இத்தனை வருடம் கழித்து ரஹ்மான் தனது ஏதோ ஒரு ஆல்பத்தில் பாட அழைத்ததாக எங்கோ படித்த ஞாபகம். திரும்ப அவரது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.
ம்ம்.. சுஜாதா.. அவங்கதான் என்னுடைய ஃபேவரைட். ச்சும்மா கலக்குவாங்க. சின்ன வயசிலிருந்தே ஜேசுதாஸுடன் பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு இதுவரை 1000க்கும் மேலான கலநிகழ்ச்சிகளில் கலந்துள்ளார். 1977-லேயே காயத்ரி என்ற படத்தில் இளையராஜா இசையில் காலை பனியில்ன்னு ஒரு பாடல் பாடியிருக்காங்க. ;-)
அருமை அருமை, முன்பு விஜய் டீவியிலும் ஜென்ஸியின் சிறப்பு நிகழ்ச்சி இருந்தது. எல்லாப்பாடல்களுமே அவருக்கு கிடைத்த வரங்கள்.
தொகுப்புக்கு நன்றி சூர்யா
.:: மை ஃபிரண்ட் ::. said...
//திரும்ப அவரது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிக்க வாழ்த்துக்கள். //
உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்..
//1977-லேயே காயத்ரி என்ற படத்தில் இளையராஜா இசையில் காலை பனியில்ன்னு ஒரு பாடல் பாடியிருக்காங்க. ;-)//
எனக்கும் அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். நான் இவ்வளவு நாட்களாக சுஜாதா ஒரு புதிய பாடகி என்று நினைத்திருந்தேன். இந்தப் பதிவில் உள்ள பின்னூட்டங்களின் மூலம் தான் அவர் நீண்ட நாட்களாக பாடிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
கானா பிரபா said...
//தொகுப்புக்கு நன்றி சூர்யா//
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி..
அன்புடையீர் வணக்கம்
பாடகர் ஜென்சி அவர்களின் பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும்.
அனைத்துப் பாடல்களையும் தரவிறக்கி என் கணிப்பொறியில் உள்ளிட நினைக்கிறேன்.நேரம் கிடைக்கும்பொழுது கேட்டு மகிழ்வேன்.அவை அனைத்தையும் எனக்கு அனுப்பிவைக்க மிக மகிழ்வேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
மின்னஞ்சல் முகவரி:
muelangovan@gmail.com
முனைவர் மு.இளங்கோவன் said...
//பாடகர் ஜென்சி அவர்களின் பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும்.
அனைத்துப் பாடல்களையும் தரவிறக்கி என் கணிப்பொறியில் உள்ளிட நினைக்கிறேன்.நேரம் கிடைக்கும்பொழுது கேட்டு மகிழ்வேன்.அவை அனைத்தையும் எனக்கு அனுப்பிவைக்க மிக மகிழ்வேன்.
//
முனைவர் மு.இளங்கோவன் அவர்களே,
என்னிடம் உள்ள ஜென்சியின் பாடல்களை கண்டிப்பாக அனுப்பிவைக்கிறேன்...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
நான் உங்க ஊட்டுப் பக்கம் வர்ற ஆளுங்க.....தினமும் பாட்டு காலைல கேக்கத்தான்..... அருமை.... எனக்கும் அதுகளை அனுப்பி வைக்க முடியுமா? என்னோட விபரப் பட்டைல மின்னஞ்சல் முகவரி இருக்குங்க சூர்யா. நொம்ப நன்றிங்க!!! விமானத்துல போகும் போது கேக்கத்தான்!!
Post a Comment