Monday, August 18, 2008

பறிக்கக் காத்திருக்கும் பப்பாளிகள்..

[நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி: நம்மப் பப்பாளி பத்தோடு பதிணொண்னா தேர்வயிடுச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... நாட்டாமைகளுக்கு ஒரு பெரிய 'கும்பிடறேஞ்சாமியோவ்!!']


ரசிகர்களின் ஏகோபித்தப் பாராட்டுக்களால் இந்தப் பப்பாளிப் படத்தையே இந்த மாத PIT போட்டிக்கு அனுப்பியுருக்கேன்.நம்மப் படத்தப் பத்தி நாட்டாமைகளெல்லாம் என்னச் சொல்லப் போறாங்கன்னுத் தெரியல..

இருந்தாலும் அவங்க சொல்லிக்கொடுத்த மூணு முக்கியமான விஷயங்கள் எந்தளவுக்கு இந்தப் படத்துல வந்திருக்குன்னு நானே ஆராய்ஞ்சுப்(?) பாத்ததுல நம்ம சிற்றறிவுக்கு எட்டியது..

1) Rule of thirds..
இதுல நம்மப் படம் பெயிலுன்னுதான் தோணுது. பப்பாளி நட்டநடுவால இருக்கறதால.. கோடுகள் சந்திக்கும் இடத்துல முக்கியமான பொருள் பப்பாளி இல்லை.. இருந்தாலும் சிலப் படங்கள் நல்லா வரணும்னா சில சட்டங்களை மீறுனாலும் பரவாயில்லன்னு நாட்டாமைகளே சொல்லியிருக்கறதால மன்னிச்சுருவாங்கன்னு நம்பறேன்.

2) Composition
இதுல நம்மப் படம் தப்பிச்சிரும்னு நம்பிக்கை இருக்கு.. இன்னும் கொஞ்சம் பக்கத்துல போனா இலைகளெல்லாம் தெரியல.. தூரமா வந்தா பக்கத்திலிருக்கும் மரங்களின் இலைகள் தெரிந்தது அப்புறம் பப்பாளியும் தெளிவாத் தெரியல.. ஆனா இந்த composition-ல ஒரு symmetric persception கெடச்சிருக்குன்னு தோணுது. அப்புறம் இலைகளெல்லாம் இயற்கையாகவே ஒரு shade தந்திருக்கு..

3) Leading lines
இங்கதான் நம்மப் பப்பாளி கலக்கிருச்சு.. மரத்தண்டு நம்மப் பார்வையை அப்படியே மேலத் தொங்கற ரெண்டு பப்பாளிக்கும் கொண்டு சேக்குது.. பெரியப் பெரிய மரங்களை அண்ணாந்து பாக்கும் போது இந்த leading lines concept தான் ஒரு பிரமிப்பைத் தருதுன்னு நெனைக்கிறேன்.

சரி.. நம்மப் படத்தப் பத்தி நாமே சுயத்தம்பட்டம் அடிச்சுக்கக் கூடாதுன்னாலும்.. போட்டியிலிருக்கற மத்த படங்கள பாக்கும்போது முடிவு அறிவிக்கறதுக்குள்ளார ஆடிச்சாத்தான் ஆச்சு.. அதனால தயவுபண்ணி பொருத்துக்குங்க..

வந்ததே வந்தீங்க.. இன்னும் கொஞ்சம் பப்பாளிப் பழங்களை ஆசை தீரப் பாத்துட்டுப் போங்க...

அதே பப்பாளிகள்.. இன்னும் பக்கத்துல..


ஒரே ஒரு பழுத்துச் சிவந்தப் பப்பாளி.. இத அப்பவே பறிச்சுச் சாப்ட்டாச்சுங்கோவ்..


...................??!!


(அப்பாவி ஆறுமுகம்: தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்..? ஒண்ணுமே புரியல..!)

10 comments:

Anonymous said...

முதல்லெ 2 காட்ணிங்கோ, அப்புறம் 1 காட்ணிங்கோ மறுபடி 2 காட்றீங்கோ ஒண்ணூமே புரியல.

ம்ம் சரி சரி நல்லாயிரொங்கோ.

நந்து f/o நிலா said...

சூர்யா அழும்பு பண்றீங்க.

இருந்தாலும் பப்பாளிங்க சூப்பர். கடைசி படத்துல லீடிங் லைன்ஸ் இல்லாமலேயே பார்வையை கொண்டுபோய் சேக்குது :P

சூர்யா said...

அனானி,
//முதல்லெ 2 காட்ணிங்கோ, அப்புறம் 1 காட்ணிங்கோ மறுபடி 2 காட்றீங்கோ ஒண்ணூமே புரியல//

என்னங்க.. ரெண்டு ரெண்டாப் பாத்து கண்ணக்கட்டுதுங்களாக்கும்?

சூர்யா said...

நந்து f/o நிலா:

//கடைசி படத்துல லீடிங் லைன்ஸ் இல்லாமலேயே பார்வையை கொண்டுபோய் சேக்குது//

ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையா சொல்லிடீங்க போங்க..!

ஜி said...

:))

சூர்யா said...

;)

deva said...

அப்பா சாமி!!!! இப்பவே கண்ண கட்டுதே!!!!

சூர்யா said...

உடனே போய் தெலுகுப் படமான 'லஷ்மி' யைப் பாருங்கள்..எல்லாம் சரியாப்போய்டும்!!

ஜெகதீசன் said...

:)
வாழ்த்துக்கள்!!
தேர்வான படங்களில் உங்கள் படமும் ஒன்று!!

சூர்யா said...

ஆமாங்க ஜெகதீசன்.. உங்க பின்னூட்டத்தைப் பாத்த பின் தான் தேர்வான செய்தி தெரிந்தது.. நன்றி..