Friday, April 17, 2009

உலக அழகி சூசன் பாய்ல் !!!

சென்ற வாரம் "Britain Got Talent" நிகழ்ச்சியில் எல்லோரயும் அசரவைத்தார் ”சூசன் பாயில்” என்ற 45 வயதானப் பாடகி. பார்ப்பதற்கு மிக ஏழ்மையாகவும், இப்படியெல்லாம் இருப்பதுதான் 'அழகு' என்று நாமெல்லாம் கருதுவதற்கு உண்டான எந்தத் தன்மையும் இல்லாமல்..'ஒரு சிறந்த பாடகியாக வேண்டும்' என்று சொன்னதுமே ஏளனச் சிரிப்புகள்.. கிண்டல் பார்வைகள்.. “Never been kissed”, திருமணமாகாத, ஒரு பூனைக்குட்டியுடன் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் ஸ்காட்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில், கிருத்துவ ஆலயத்தில் பாடி பிழைப்போட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்...ஒரு வரி பாடியெதுமே அரங்கமே எழுந்து கைத்தட்டவைக்கும் அந்தப் பாடகியின் திறமை.. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது..!!!

ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடும் நம் எல்லோருக்கும் இந்தப் பெண்ணின் திறமை.. ஒரு சரியானப் பாடம்!!!

இதுவரைப் பார்க்கவில்லையென்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று..


அந்த நிகழ்ச்சியின் வீடியோவை இந்தத் தொடுப்பில் சென்று பார்க்கவும்..

Monday, March 16, 2009

கருப்பு/வெள்ளை : வாழ்க்கை?

இந்த மாத PIT போட்டிக்கான படங்களாக இந்தப் படங்களிலிருந்து..
இங்கு தொடங்கி...இதுவரைத் தொடரும்..


வாழ்க்கை... ஒரு முடிவில்லா(?) பயணம்.

இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறேன்..

இதுவரை நல்ல பல கருத்துக்களைப் பலர் அளித்துள்ளனர்..

குறிப்பாக ப்ரியா, சூரியன் இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றிருக்கிறார்..

அப்படி மாற்றிப்பார்த்ததில்..உண்மையாகவே மிகவும் நன்றாக வந்தது. நானும் அவர் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
இதை முதலிலேயே பண்ணியிருக்கலாம்..

கைப்புள்ளையின் தத்துவம் மிக அருமை.. ஆனால் வாழ்க்கை ஒரு முடிவில்லா பயணமா? முடிவுல்ல பயணமா? எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கிறது இல்லையா?

இதே படம் வண்ணத்தில்...

Straight to sky..

அறுபதுக்கும் மேற்பட்டோர் சும்மா அசத்தியிருக்காங்க.. இதுல நம்மப் படம் எந்த எடத்துல இருக்குதுன்னு தெரியல.. எப்படியிருந்தாலும் இதுவரை வந்தப் பாராட்டுக்களே கொஞ்சம் ஊக்கமளிப்பதாக உள்ளது..

Sunday, February 22, 2009

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...”

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...” ஆஸ்கரில் ஒலித்தத் தமிழ் வார்த்தை..
ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!!!!

'Inside Man' என்ற படத்தின் title song-ஆக முதன் முதலில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ‘தையத் தையா' கேட்டபோதே நம்மாள் கண்டிப்பாக ஒரு நாள் ஆஸ்கரில் வருவார் என்ற நம்பிக்கை இன்று உண்மையானது...

”Slumdog Millionare” என்னைப் பொருத்தவரையில் ஏ.ஆர்.ரகுமானின் சிறந்தப் படைப்பு என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அது என்னால் படத்தின் திரைக்கதையமைப்பினால், காட்சிகளோடு ஒன்றிப்போக முடியாததாலும், துண்டு துண்டான பின்னனி இசையினாலும் இருக்கலாம்.. இருந்தாலும் நம்மத் தமிழன் உலகத்தில் உயர்ந்த விருதினால் அங்கீகரிக்கப் படுவது ரொம்ப மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது..

இந்த விருதால் இப்போதைக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.. ‘சக்கரகட்டி, அ..ஆ, அழகியத் தமிழ் மகன், சிவாஜி' போன்ற குப்பைப் படத்துக்கெல்லாம் இசையமைக்க அவருக்கு நேரம் இருக்காது. அப்புறம் சில ஹாலிவுட் படங்களில் அவரது இசையைக் கேட்கலாம்..