Sunday, June 29, 2008

எங்க ஊர்த் திருவிழா...

எங்க ஊர்ல (Sandiego Fair) இப்ப திருவிழா.. சரி.. சரி.. நான் இப்ப இருக்கற இந்த ஊர்ல திருவிழா... அப்ப எடுத்தப் படங்கள்ல சில உங்க பார்வைக்கு..
(எல்லாப் படங்களையும் தடையில்லாமல் பார்க்க.. இங்கே க்ளிக்குங்க


குழந்தைகளுக்கு குதுகூலம்..
All the rides in action


கலர் கலரான பொம்மைகள்..
All the rides in action


வியக்க வைக்கும் ராட்டினம்..
All the rides in action

மற்றும் விதவிதமான ராட்டினங்கள் விடியும் வரை..
All the rides in action

எல்லாம் இருக்கு.. இருந்தாலும் காவடி தூக்கி, தீர்த்தம் எடுத்து, கெடா வெட்டி, பறையடிச்சு, சாமியாடி கொண்டாடும் நம்மூர் கோயில் திருவிழால கிடைக்கிற மகிழ்ச்சி இங்க கிடைக்காதுங்க..!!

Friday, June 27, 2008

அட்றாட்றா நாக்க முக்க..!


விகடனில் வந்த இந்தக் கட்டுரையைப் படித்த பின் தான் “காதலில் விழுந்தேன்” என்ற, இன்னும் வெளிவராத படத்தின், இந்தப்பாடலைக் கேட்டேன்.
சும்மா சொல்லக்கூடாதுங்க, சும்மா பின்னி பெடலெடுத்துட்டாங்க.. பாட்டைக் கேக்கும்போது, சும்மா வேட்டியத் தூக்கிக்கட்டி, நாக்க நல்லா மடிச்சு உள்ள தள்ளி, கும்முன்னு ஒரு குத்தாட்டம் போடனும்னு தோனுதுங்க.. இன்னிக்கு முழுசும் மண்டைக்குள்ள ஒரே ” நாக்க முக்க.. நாக்க முக்க..” தான்னா பாத்துக்கோங்களேன்..


நன்றி: விகடன்

படத்துல 2 விதத்துல இந்த பாட்டு இருக்குங்க.. இன்னும் நீங்க கேக்கலைனா இதோ..

1) ஆண் குரலில், கொஞ்சம் western இசை கலந்து:

Get Your Own Songs Player at Music Plugin

2) சின்னப் பொண்ணு என்ற ‘பொண்ணு' பாடியது, அசல் கிராமியப் பாடல்:

Get Your Own Songs Player at Music Plugin

கொசுறு (எச்சரிக்கை) செய்தி:

இதே படத்துல ”உனக்கென நான்” அப்படினு இன்னொரு பாட்டு.. அப்படியே ரியானா (Rihana) வோட Unfaithful - ன்ற அருமையானப் பாட்ட குத்திக் கொதறி, கொடல உரிச்சு தொங்கப் போட்டிருக்காங்க. ரியானா-வ எனக்கு மாதிரியே உங்களுக்கும் பிடிக்கும்னா தயவுப்பண்ணி இந்தப் பாட்ட கேட்றாதீங்க.

Thursday, June 26, 2008

கல்லூரி மாணவிகளின் உடைக் கட்டுப்பாடு!!

இன்றைய (06/27) தினமலரின் முதல் பக்கத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படம்:எனக்குத் தோன்றிய இரண்டு கேள்விகள்:

1) இந்த உடைகளில் எந்தவிதமான குறைகளும் எனக்குத் தெரியவில்லை. (பிகர்ஸ்-லாம் கொஞ்சம் எடையதிகம்(!) என்பதைத்தவிர) உங்களுக்கு?
2) இவர்களின் அனுமதி பெற்றா இப்படங்களை வெளியிடுகிறார்கள்? இப்படங்களால் இப்பெண்களுக்கு எதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தினமலர் பொறுப்பேற்குமா?

தரையிறங்காமல் சென்ற விமானம்.. காரணம்: விமானி தூங்கிவிட்டார்...

டைம்ஸ் ஆப் இந்தியா
செய்தி

அடுத்த தடவை ஏரோப்ளேன்ல பறக்கும் போது விமானி முழிச்சிருக்கறாரான்னு ஒருதடவை பாத்துக்கோங்க மக்களே...

Saturday, June 21, 2008

பீச் ஓரமா அந்தப்பக்கம்...

ரொம்ப நாளா P & S camera வெச்சுட்டே என்னோட புகைப்படக்கலை ஆர்வத்திற்கு தீனி போட்டுட்டிருந்தேன். இப்பதான் கடைசியா ஒரு SLR வாங்கினேன். Nikon D40: உள்ளதிலேயே விலைக் குறைவான, எடைக்குறைவானதுன்னு சொன்னாங்க.. இதுவர ரொம்ப நல்லாருக்கு..
அதோட 18-55mm லென்சும், 55-200mm லென்சும் (மிகவும் பயனுடயது) கொடுத்தாங்க.

முதலில் வீட்டுகுள்ளாரயும், வீட்டுத்தோட்டத்திலும் அப்படியும் இப்படியும் பிடிச்சதுல 2 படம்..அப்புறம் போன வாரக்கடைசியில் கடற்கரைக்குச் போயி கால் வலிக்க நடந்து.. கை வலிக்க க்ளிக்கியதுல நல்லாருக்குன்னு நான் நினச்சுதுல்ல ஒரு சிலத.. உங்க பார்வைக்கு...

பிடிச்சிருந்தா.. ஒரு ரெண்டு நல்ல வார்த்த சொல்லீட்டுப்போனீங்கனா சந்தோசமா இருக்குங்க..

பெரிய மனுசங்கெல்லாம் எதாவது குற்றங்கொற இருந்துச்சுன்னா அத சொல்லீட்டுப் போங்க..
நானும் கத்துக்கறங்க..

மகாராசாப் பறவை..
இதுக்கு நான் வெச்சப் பேரு..மகாராசாப் பறவை.. அதென்னமோ இது பறந்து வர தோரணயப் பாத்தா அப்படியே மகாராசா படை பரிவாரங்களோட வலம் வர மாதிரிதான் இருக்கும்..தைரியசாலி அணில்..
நம்மூர்ல அணில் நம்ம பத்தடிக்கு அந்தப் பக்கம் வந்தாலே பாஞ்சு ஓடிப்போயிரும்.. இங்க நான் பக்கதுலபோயி படம் புடிச்சும் அசராம போஸ் கொடுத்திட்டு இருந்துச்சு..மணக்கோட்டைஎங்காத்தா அடிக்கடி சொல்லுங்க.. 'வெறும் மனக்கோட்ட கட்டாத.. கட்டாத..' ன்னு.. இங்க குட்டிப்பசங்க மண(ல்)க்கோட்டை கட்டி வெச்சுருக்காங்க.. இதுக்கு என்ன சொல்லுமோ எங்காத்தா..எங்கூரு அய்யனாரு..
நம்மூர்ல இப்படியொரு பாறை இருந்துச்சுனா கண்டிப்பா அய்யனார் சாமியாக்கி வேல் கம்பெல்லாம் குத்தி, சாமியாடி, கோழியடிச்சு கெடா வெட்டி நோம்பி கொண்டாடியிருப்போம்ல..குட்டிச் (மணல்) சாமியார்
இந்தப் பொடியன் நம்மூர்ல இல்லாம போய்ட்டாங்க...50 பைசாப் படம்
நம்ம பங்காளியொருத்தன் நான் இப்படி புல்லயும் பூட்டயும் படம் புடிக்கரதப் பாத்து ‘என்ன 50 பைசா படம் புடிக்க போறியா' -னு கேப்பான். இந்த மாதிரி post card படம் புடிக்கும் போதெல்லம் அதுதான் நெனப்புக்கு வரும்..பூந்தளிராட..
சின்னப் பசங்க ரெண்டு அழகா சோடி போட்டு சுத்தீட்டிருந்துச்சுங்க.. பன்னீர் புஷ்பங்கள் சோடிக் கணக்கா.. அந்த வயசுல இதெல்லாம் எவ்வளவு சுகம். இல்லீங்களா..?ஆடியடங்கும் வாழ்க்கை..
இந்த வயசுல நாமெல்லாம் இப்படி இருக்க கொடுத்து வெச்சுருகனுங்க.. இல்லீங்களா..?எகிறிக்குதித்தேன்..வானம் இடித்தது..
இதுதாங்க.. எனக்கு ரொம்ப பிடிச்ச படம். உங்களுக்கு?
படமெல்லாம் பிடிச்சிருந்துச்சுங்களா?

Saturday, June 14, 2008

ஜூன் மாத போட்டிக்கு...Yet another day at work..

கடைசி நேரத்தில்... போட்டி வண்டியைப் பிடிச்சாச்சு...

போட்டியில் பங்கேற்றிருக்கும் மற்றப் படங்களைப் பார்க்கும் போது.. நமக்கு வாய்ப்பு இந்தத் தடவையும் கடினம்தான். இருந்தாலும் முயற்சிசெஞ்சுப்பார்க்கலாம்...


கொக்கின் வேலை.. இரை தேடுதல்..
பொறுமையாக, சரியானத் தருணத்திற்காக காத்திருத்தல்..
அந்த நொடியை.. சரியாகப் பயன்படுத்துதல்..

ஒரு வகையில் கொக்கின் வேலை..நமது அன்றாட வாழ்விற்கும் வேலைக்கும் சரியாகப் பொருந்தும், ஒரு நல்லப் பாடத்தை கற்பிப்பதாக நினைக்கிறேன்.

இந்த மாதத் தலைப்பிற்கும் சரியாகப் பொருந்தும் என நம்புகிறேன்.

இந்தப்படத்தை.. ரொம்ப நேர குழப்பத்திற்குப் பின்..தெரிவு செய்தேன்..சரியாயிருக்குமா?Yet another day at work..
Originally uploaded by Chumma...போட்டிக்காக எடுத்த மற்ற படங்கள்...