Friday, July 13, 2007

ஊருக்கு போய்ட்டு வந்தேங்க..

இங்க US -ல ஒன்ற வருசங்கழிச்சு நம்ம ஊருக்கு போய்ட்டு வந்தேங்க.. நமக்கு அங்க தோணுனது கொஞ்சத்த இங்க சொல்றங்க..

1) வெலவாசி (விலைவாசி):

இங்க அமெரிக்காவுல எத வங்கறதா இருந்தாலும் ரூபாயில் மாற்றியே பழக்கமாகி.. இந்தியா போயீ டாலருல மாத்தி பார்த்தா.. அடங்கொக்கா..மக்கா.. பெருசா வித்தியாசமில்லேங்கோ... திரும்பி "US" போயே Wallmart sale -ல வாங்கிக்லாம்டினு என்ற ஊட்டுகாரிட்ட சொல்லி நல்ல வார்த்தைல நல்லா வாங்கிக்கட்டிகிட்டுனேங்க..என்னங்க.. எல்லா றொம்ப அநியயாமுங்க.. எப்படீ ஏழ பாழைகளெல்லாம் பொழைகிறாங்களோ போங்க...
புது புது காருகளும்.. பெரிய பெரிய ஓட்டல்களும்.. தடுக்கி உலுந்தா பெரிரிரிய..பெரிரிரிய கட்டடங்களும்..
"IT" மக்கள் மட்டும்மில்லீங்க.. நெறய புது பணக்காரங்க உருவாகிட்டே இருக்காங்க.. புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. உதாரணத்துக்கு எங்கூருக்கு பக்கத்துல, பல்லடத்துல இருந்து 400 கோடி "turn over" பண்றாங்கணு சொல்ற "சுகுணா சிக்கன்ஸ்"! ஏங்க.. நீங்களும் நானும் எத்தன வாட்டி கசாப்பு கடைய பாத்து, மூக்க பொத்தீட்டு போயிருப்போம்? எப்பவாவது அவங்களுக்கு சிக்கன் சப்பளை பண்ணி பணக்காரனாகலாம்னு தோணுச்சா நமக்கு?

2) Fashion:
பொண்ணுகளுக்கெல்லாம் வழக்கம்போல அழகாய்ட்டதா நெனப்பேரீட்டே போகுது.. Thanks to those "Beauty parlours". ஒவ்வொரு தெருமுனைக்கும் கோயில் இருக்கோ இல்லியோ.. (இருந்துமட்டும் என்ன பிரயோசனம்..?) "ப்யூட்டி பார்லர்" இருக்குங்க..என்ன என்னத்தியோ பூசராலுக.. 5000..10000 -ணு வாங்கிக்கறாலுக.. (எனக்குகூட அங்க சூப்பர்ரா ஒரு மசாஜு பண்ணிகனும்னு சின்னதா ஓரு சபலம்..) அவங்களைச்சொல்லி குத்தமில்லீங்க..
நம்ம கொள்க என்னனா.. "அழகா இருக்கற பொண்ணுகளுக்கு மேக்கப் தேவையில்லை.. அழகா இல்லாத பொண்ணுக எவ்வளவுதான் மேக்கப் போட்டலும் அழகாகவே பொறதில்ல" நம்ம சொல்லியா கேட்ற போராங்க.. சரி அத விடுங்க.. நம்ம பசங்க மேட்டருக்கு வருவோம்.. அதென்னங்க எல்லாப்பசங்களும் அவ்வளவு "டைட்டா" பேண்ட் போட்டிருக்காங்க? பாக்கவே அருவருப்பா இருந்துச்சு..இங்க "US"-ல Gay பசங்கதான் அப்படி போட்டிருபாங்க.. எற்கனவே இங்க "desi" பசங்க சேந்து போனா (வேற வழி.. நம்ம கூட எந்த பொண்ணுக வராளுக?) "Faggets" -ணு கார்ல பொறவுனெல்லாம் நின்னு horn அடிசுட்டு போறானுக.. இதுல டைட்டா பேண்ட்டு வேற..

அப்புறம் வழக்கம்போல குறைகளேதும் சொல்லலைனா இந்தியா போனதே அர்த்தம் இல்லாம போய்டும் இல்லீங்களா? வேறென்னங்க.. இந்த "Pollution" தான்.. இன்னும் எங்க பாத்தாலும் குப்பை..குப்பை.. குப்பைதாங்க.. ஊர அழகுபடுத்தரோம்னு செயற்கை நீர்வீழ்ச்சி வெக்கறதும்.. பூங்காக்கள் கட்றதும்.. தேவையே இல்லீங்க.. 100 அடிக்கு ஒரு குப்பத்தொட்டி வெச்சாவே போதுங்க.. ஆனா அதுல வெளம்பரம் கிடைக்காது பாத்தீங்களா.. நம்ம அரசியல்வாதிகள பத்திதான் தெரிமே..நமக்கெதுக்குங்க அதெப்பத்தி.. நமக்கு "சிவாஜி" படம் 100 நாள் "Housefull" -லா ஓடுனா போதுங்க.. நம்ம பசங்க புள்ளங்களெல்லாம் நல்லா பொழச்சுக்குங்க..

பெயர் காரணம்..?

ஒண்ணுமில்லைங்க.. சும்மா தமாசு.. தமாசுதாங்க.. இந்த வாழ்க்கையே..!

முதல் தமிழ் பதிவு

இது என் முதல் தமிழ் பதிவு மட்டுமல்ல, முதல் பதிவும் கூட. இலகுவாகதான் உள்ளது. இனி நிறைய எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. எழுதுவேன்.