- நாஞ்சில் நாடன் ('தீதும் நன்றும்!' ஆனந்த விகடன் 30-07-08)
சென்னைப் போன முதல் நாள், விமான பயணத்தில் தூக்கம் கெட்டுப் போனதால் விடியல் காலையில் எழுந்து பீச் போலமென்று சென்றேன். போன பின் தான் அது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்தது.
எங்கு பார்த்தாலும் குப்பை.. ப்ளாஸ்டிக் கவர்கள்...
நிறைய படங்களில் பார்த்த அந்த 'Karl Schmidt Memorial' கட்டிடம் பரிதாபமாக இருந்தது.

இந்த குப்பைகளுக்கும் கண்றாவிகளுக்கு மத்தியிலும் நிறைய பேர் வாக்கிங் போவதும், யோகா செய்வதுமாக இருந்தது ஆச்சர்யம்.

பீச்சின் இரண்டு பக்கமும், சுமார் ஒரு பத்து, பதினைந்து தடியன்கள் வரிசையாக கடலைப் பாத்துட்டு உட்கார்ந்திருந்தார்கள். என்னடா செய்ராங்கன்னு பாத்தா... அடக்கண்றாவி.. எல்லாம் 'போய்'ட்டிருந்தானுங்க.. அடப்பாவிகளா.. ஒரு ஓரமாவது போகக்கூடாது... நட்ட நடுவுல...

இந்தப் படத்துல யோகா (?) பண்ணிட்ருக்கற ஆளுக்குப் பின்னாடி பாத்திங்கன்னா புரியும்..
தினமல(ம்)ர்ல இந்த மாதிரி காதலர்கள அடிக்கடி படம் பிடிச்சு, எதோ இவங்களாலதான் நம்ம ‘கலாச்சாரம்' கெடர மாதிரி போடரானே, இந்த மாதிரி கண்றாவிகளையும் போட்டாத்தான் என்ன?

விகடனில் நாஞ்சில் நாடன் சொன்னது எவ்வளவு உண்மை!
இதுவா நம் தமிழ் கலாச்சாரம்?
6 comments:
:-((( உண்மைத் தான் அண்ணா..!!
காலையில் அந்த பக்கம் போகும் பாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை. :=-)
sri,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கையே..
வடுவூர் குமார்,
அந்த பாக்கியம் கிடைக்காமலிருப்பது நல்லது. பாத்தால் நொந்துபோவீர்கள்.
மனிதானாய் பார்த்து திருந்தாவிட்டால்............??????????????????????????????
பிரபு,
மனிதானாய் பார்த்துத் திருந்தாவிட்டாலும், சட்டங்களால் இந்த மாதிரி கண்றாவிகளைத் திருத்த முடியும் என்று நம்புகிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Post a Comment