Wednesday, August 13, 2008

பப்பாளி... (பிட்டு படம்)

ஒரு வருடத்தைக் கடந்து என்னைப் போன்ற பல புகைப்பட ஆர்வலர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் 'தமிழில் புகைப்படக்கலை' குழுவினர்க்கு முதலில் மனமார்ந்த நன்றி...

இவ்வளவு நாளாக மாதாமாதம் ஒரு தலைப்பைக் கொடுத்ததால், போட்டிக்கான புகைப்படம் தெரிவு செய்வது, கடிவாளம் போட்ட குதிரை சவாரி போல், சிறிது வசதியாக இருந்தது. இந்த மாதம் கடிவாளத்தை நீக்கியதும், ஒண்ணுமே புடிபடலை.

இப்பக் கொஞ்ச நாளாத்தான் கேமராவத் தூக்கிட்டு படம் காமிச்சிட்டு இருக்கறதால எடுக்கிற எல்லாப் படமும் அருமையாதான் தெரிகிறது. இதுல எத போட்டிக்கு குடுக்கிறதுன்னு ஒண்ணும் புரியல. அங்கேயும் இங்கேயும் சிலரிடம் கேட்டும், flickr - ல வந்த ஒண்ணு ரெண்டு பின்னூட்டங்கள வெச்சும், இந்த 5 படங்கள தெரிவு செஞ்சுருக்கேன்.

ஐந்தாவது:

இந்தத் தடவ ஊருக்குப் போன போது என் மருமகப்பொண்ணு அஷ்விகா தண்ணில விளையாடிட்டிருக்கும் போது எடுத்தது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா நல்லா வந்திருக்கும்.




நாலாவது:

பாப்பாளி மரத்த ஏதேச்சயா அண்ணாந்து பாத்தப்ப தெரிஞ்ச அழகு.. அத அப்படியே படம் புடிச்சுப் பாத்தா இன்னும் அழகா இருந்துச்சு. மரங்கள அண்ணாந்து பாத்தா பெரும்பாலும் பிரமிப்பாவும், அழகாகவும் இருக்கும். இன்னும் அந்தப் பிரமிப்பை புகைப்படத்தில் கொண்டுவர முடியவில்லை. குறைந்தபட்சமா இதில் அந்த அழகையாவது கொண்டுவந்திருக்கிறதா நம்பறேன்.

(ரசிகர்களின் ஏகோபத்திய ஆதரவைத் தொடர்ந்து, இந்தப் பப்பாளியும் போட்டியில் கலந்துகொள்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.... )(கரவொலியோசை விண்ணைப் பிளக்கிறது!!!)



மூணாவது:

நூறு வயச கடந்த தாத்தாவும், தொண்ணூறு வயசக் கடந்த பாட்டியும்... இன்னும் அதே காதலுடன் யாருடைய உதவியும் இல்லாம தனியா வாழ்ந்திட்டு இருக்காங்க. என்னுடய தூரத்துச் சொந்தம். இவர்களிடம் பேசிய அந்த சில மணி நேரங்களில் கற்றுக் கொண்டது : Priceless!



இரண்டாவது:

குழந்தைகளுடன் விளையாடுவதும், அவர்கள் விளையாடுவதை ரசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் முக்கியமான ஒன்று. உடலும், வயதும் எப்பவுமே குழந்தையாகவே இருக்க ஒத்துழைக்காத போதும், மனதளவில் இருக்க இது மிகவும் உதவுகிறது. கடைசிவரை இப்படத்தையே போட்டிக்கு அனுப்ப நினைத்திருந்தேன்.



முதல் (போட்டிக்கு):

அந்திமாலை.... ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்காக திரையிடும் சொர்க்கத்தின் முன்னோட்டம் (Heaven's trailer). என்னுடைய முதல் HDR முயற்சி.
இதுவரை ஒரு 200 படங்களுக்கு மேல் அந்தி சாய்வதை எடுத்துள்ளேன். அதில் எல்லாமே எனக்குப் பிடித்தவை. அதில் இதுவும் ஒன்று.

11 comments:

Anonymous said...

Good photos!

Unknown said...

அண்ணா பப்பாளி மரம் ஃபோட்டோ சூப்பர்..!! :-))

SurveySan said...

pappaali arumai!

Kavi said...

பப்பாளி மரம் அழகாய் இருக்கிறது.
விசிறி போல விரிந்திருக்கும் பப்பாளி இலைத் தண்டுகள் அசத்தலாய் இருக்கிறது.

சரண் said...

Sri, Surveysan, ஓவியா

வருகைக்கும், பப்பாளிப் பாராட்டுக்கும் நன்றி.

நீங்களெல்லாம் சொல்லரத பாத்தா... இந்தத் தடவையும் தப்பான படத்தத்தான் போட்டிக்குக் கொடுத்திருக்கேன் போலிருக்கிறது. எப்படியோ உங்களுக்கு ஒண்ணாவது புடிச்சுதே.. அதுவரைக்கும் ரொம்ப மகிழ்ச்சி..

Thamira said...

பப்பாளி மரம் பிரமாதம் (ந‌ம்ம பங்குக்கு வெறுப்பேத்துறது.. எப்படி?).. சும்மா சொன்னேங்க.. எல்லாமே சூப்பருங்க.!

சரண் said...

ஓ... எல்லாம் ஒரு கூட்டமாத்தான் கிளம்பியிருக்கிய்ங்களா..? நாந்தான் ஒண்ணுந்தெரியாம உளரிட்டானா...?

வெவரமா புரிய வெச்சதுக்கு ரொம்ப நன்றியப்பா.. தாமிரா..

ஜியா said...

Papaya tree sema tucker... athe maathiri beach childrenum attakaasam :))

சரண் said...

ரொம்ப நன்றி ஜி!!!

பப்பாளியயும் போட்டியில் இணைத்துவிட்டேன்!!!
தங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் பப்பாளி!!!

நானானி said...

இந்த படைப்பாளியின் பப்பாளி சூ..ப்பர்!!
அடுத்து, அலைகளில் ஆடும்
சின்னஞ்சிறுசுகள்!!!

சரண் said...

நானானி.. நன்னி !