இங்கு தொடங்கி...
இதுவரைத் தொடரும்..

வாழ்க்கை... ஒரு முடிவில்லா(?) பயணம்.
இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறேன்..
இதுவரை நல்ல பல கருத்துக்களைப் பலர் அளித்துள்ளனர்..
குறிப்பாக ப்ரியா, சூரியன் இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றிருக்கிறார்..
அப்படி மாற்றிப்பார்த்ததில்..

உண்மையாகவே மிகவும் நன்றாக வந்தது. நானும் அவர் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
இதை முதலிலேயே பண்ணியிருக்கலாம்..
கைப்புள்ளையின் தத்துவம் மிக அருமை.. ஆனால் வாழ்க்கை ஒரு முடிவில்லா பயணமா? முடிவுல்ல பயணமா? எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கிறது இல்லையா?
இதே படம் வண்ணத்தில்...

அறுபதுக்கும் மேற்பட்டோர் சும்மா அசத்தியிருக்காங்க.. இதுல நம்மப் படம் எந்த எடத்துல இருக்குதுன்னு தெரியல.. எப்படியிருந்தாலும் இதுவரை வந்தப் பாராட்டுக்களே கொஞ்சம் ஊக்கமளிப்பதாக உள்ளது..
14 comments:
கலக்குறீங்க!
ம்ஹூம்!
கலர்படம் செமையா இருக்குங்க சூர்யா
நீங்க ஈரோடுதான
நன்றாக உள்ளது நண்பரே..
நன்றி நாமக்கல் சிபி, கார்த்திக் & சுபாசு..
கார்த்திக்: ஆமாங்.. ஈரோடுதானுங்..!! நீங்க ஈரோட்ட்ல எங்க இருகீங்?
சூரியன் இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. அருமையான படம். வறண்டு, நீண்ட பாதையில் வழிகாட்டும் ஒளி....
it gives positive approach to the life....
தமிழ்ப்பறவை said...
// வறண்டு, நீண்ட பாதையில் வழிகாட்டும் ஒளி....
it gives positive approach to the life....//
Glad to hear this perspective of the picture..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்ப்பறவை...
// ஈரோட்ட்ல எங்க இருகீங்?//
மூளப்பாலையம்
உங்களோட அந்த லீடிங்லைன்ஸ் பதிவுக்கு நானும் ஒரு ரசிகன்.
அத விட தெளிவா யாராவது விளக்கமுடியுமா :-))
கார்த்திக் said...
//மூளப்பாலையம்//
மூலப்பாளையம்... நல்லாத் தெரியுங்க..ஈரோடைலிருந்து எங்க கெராமத்துக்கு உங்கூர் வழியாத்தான் வழக்கமா போவனுங்..
//உங்களோட அந்த லீடிங்லைன்ஸ் பதிவுக்கு நானும் ஒரு ரசிகன்.
அத விட தெளிவா யாராவது விளக்கமுடியுமா :-))//
இல்லிங்களா பின்ன.. நமக்கெல்லாம் அப்படி சொன்னாதானுங் சுலுவா புரியும்.. ஹி..ஹி..
நானு நாமக்கல்லுங்கோவ்..! :-)
ஆனா.. எல்லா சொந்தக்காரங்களும்.. ஈரோட்டுலதான்..! :-))
புகைப்படங்கள் அருமை. எனக்கு இண்ட்ரஸ்ட் மட்டும்தான் இருக்கு. பொறுமையில்லை. :(
உங்களுக்கு ஒரு நல்ல லேஅவுட் செலக்ட் பண்ணி...
http://unchal.blogspot.com/2009/03/popup-image-loading-method.html
இந்த பேஜில் இருப்பதுபோல (என்னோட ப்லாகிலும் இதை பயன்படுத்தியிருக்கேன்) உங்க படங்களை லோட் செய்யுங்க சூர்யா. ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க. :)
ஹாலிவுட் பாலா said...
//
ஆனா.. எல்லா சொந்தக்காரங்களும்.. ஈரோட்டுலதான்..! :-))
//
நம்மூர்க்காரங்க வலையுலகத்துல அசத்தீட்டிருக்காங்க..
நன்றிங்க..
ஹாலிவுட் பாலா said...
//உங்களுக்கு ஒரு நல்ல லேஅவுட் செலக்ட் பண்ணி...
...ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க. :)//
நம்ப நாளா இதெல்லாம் பண்ணனும்னு இருந்தேன்.. உங்களோட ஊக்கத்துல இப்ப வலையமைப்பயும் மாத்தி.. நீங்க சொன்ன மாதிரி படத்த பெருசு பண்ணி அதே பக்கத்துல காட்டர மாதிரியும் பண்ணியாச்சுங்க..
நொம்ப நன்றிங்க..
உங்க வலைப்பதிவின் அமைப்பு அட்டகாசமா இருந்துச்சுங்க.. நிறய உங்ககிட்ட இருந்து சுடப் போறேன்.. ஹி..ஹி..
நானும் பட விமர்சனமெல்லாம் எழுதலான்னு இருக்கேன்.. பாக்கலாம்..
"இங்கு தொடங்கி...
இதுவரைத் தொடரும்.."
பிடித்திருந்தது... படங்களும் அதன் வரிகளும்
// ரகசிய சிநேகிதி said...
பிடித்திருந்தது... படங்களும் அதன் வரிகளும்//
வாங்க சிநேகிதி.. பின்னூட்டங்களைக்கூட கவிதையாத்தான் சொல்றீங்க.. நன்றிங்க..
Post a Comment