Sunday, February 22, 2009

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...”

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...” ஆஸ்கரில் ஒலித்தத் தமிழ் வார்த்தை..
ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!!!!

'Inside Man' என்ற படத்தின் title song-ஆக முதன் முதலில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ‘தையத் தையா' கேட்டபோதே நம்மாள் கண்டிப்பாக ஒரு நாள் ஆஸ்கரில் வருவார் என்ற நம்பிக்கை இன்று உண்மையானது...

”Slumdog Millionare” என்னைப் பொருத்தவரையில் ஏ.ஆர்.ரகுமானின் சிறந்தப் படைப்பு என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அது என்னால் படத்தின் திரைக்கதையமைப்பினால், காட்சிகளோடு ஒன்றிப்போக முடியாததாலும், துண்டு துண்டான பின்னனி இசையினாலும் இருக்கலாம்.. இருந்தாலும் நம்மத் தமிழன் உலகத்தில் உயர்ந்த விருதினால் அங்கீகரிக்கப் படுவது ரொம்ப மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது..

இந்த விருதால் இப்போதைக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.. ‘சக்கரகட்டி, அ..ஆ, அழகியத் தமிழ் மகன், சிவாஜி' போன்ற குப்பைப் படத்துக்கெல்லாம் இசையமைக்க அவருக்கு நேரம் இருக்காது. அப்புறம் சில ஹாலிவுட் படங்களில் அவரது இசையைக் கேட்கலாம்..

13 comments:

Anonymous said...

Sivaji ah idhula sethutingalae... enna boss idhu...

சூர்யா said...

மன்னிச்சுக்கோங்க.. சிவாஜி யை என்னால நல்லப் படம்ன்னு ஒத்துக்கவே முடியாதுங்க.. அதுக்காக ரஜினியை பிடிக்காம சொல்ல்றேன்னு நெனச்சுக்காதீங்க.. ரொம்பப் பிடிக்கும்ங்கறதாலதான் அவரோடத் திறமையை இப்படியெல்லாம் அமெச்சூர்த்தனமா படம் எடுத்து வீணடிக்கிறாங்களேன்ற கோபம்தான்..

எப்படியோ ஏ.ஆர் ரகுமான் இனிமே தப்பிச்சுட்டாரு..

பழமைபேசி said...

டமில்ன்னு சொல்லாம தமிழ்ன்னு சொன்னதுல இன்னும் நெம்ப சந்தோசம்... நேர்த்தியான பேச்சு!!

Anonymous said...

Nobody is mentioning about 'Rasool(Rasul) Kutty got Oscar too'.

சூர்யா said...

// பழமைபேசி said...
டமில்ன்னு சொல்லாம தமிழ்ன்னு சொன்னதுல இன்னும் நெம்ப சந்தோசம்... நேர்த்தியான பேச்சு!!
//

நெசமாத்தானுங்க.. அப்புறம் “I has a choice between love and hate. I choosed love, so I'm here” -ன்னு சொன்னதும் ரொம்ப அர்த்தமுல்லதா இருந்துச்சுங்க.. ஒரு வாரமா யோசிச்சு வெச்சிருந்தாருங்கலாமா..

சூர்யா said...

// Anonymous said...
Nobody is mentioning about 'Rasool(Rasul) Kutty got Oscar too'.
//

எனக்கு அவரப்பத்தி தெரியாதுங்களே.. அவரும் தமிழா?

”ஓம்” பத்தி எதோ அழகாச் சொன்னாருங்க..

எல்லாருமே நம்ம நாட்டுக்கு பெருமை சேத்திட்டாங்க.. நல்லாவும் பேசினாங்க..

வெத்து வேட்டு said...

i heard Rasoul Pookutty is a Malayalee... so he doesn't deserve to be mentioned by Tamils

சூர்யா said...

//
வெத்து வேட்டு said...
i heard Rasoul Pookutty is a Malayalee... so he doesn't deserve to be mentioned by Tamils//

என்னங்க வெத்துவேட்டு.. இப்படி குதர்க்கமா பேசரிங்களே...

நான் எதார்த்தமா கேட்டனுங்.. ‘அட அவரும் நம்மாளா' அப்படிங்கற மாதிரி..

மலையாளிகளும் நம்மளுதானுங்களே..

அருண்மொழிவர்மன் said...

உண்மைதான். ரஹ்மானின் இதைவிட நல்ல இசையினை நாம் நிறைய கேட்டிருக்கின்றோம். ஆனால் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க பெற்றது இதன்மூலம் தான் என்பதே முக்கியமானது.

ராஜா வுக்கு லண்டன் ஹால் ஒப் அசெம்பிளியிலும் யுவனுக்கு சைப்ரஸிலும் விருதுகள் கிடைத்தாலும் ஆஸ்கார் என்பது தமிழர்களின் நெடுநாளைய கனவு என்பது குறிப்பிடதக்கது

பழமைபேசி said...

_/\_

பழமைபேசி said...

//ஆஸ்கார் என்பது தமிழர்களின் நெடுநாளைய கனவு என்பது குறிப்பிடதக்கது//

அந்த மனநிலை மாறணும் தலைவா! நம்ம விருது, பெருமைக்குரியதுன்னு நினைக்கணும்.... தப்பா நினைச்சிக்காதீங்க என்ன?!

சூர்யா said...

அருண்மொழிவர்மன் said...
//
ராஜா வுக்கு லண்டன் ஹால் ஒப் அசெம்பிளியிலும் யுவனுக்கு சைப்ரஸிலும் விருதுகள் கிடைத்தாலும் ஆஸ்கார் என்பது தமிழர்களின் நெடுநாளைய கனவு என்பது குறிப்பிடதக்கது//


வருகைக்கும் தகவலுக்கும் நன்றிங்க..

சூர்யா said...

பழமைபேசி said...
//அந்த மனநிலை மாறணும் தலைவா! நம்ம விருது, பெருமைக்குரியதுன்னு நினைக்கணும்.... தப்பா நினைச்சிக்காதீங்க என்ன?!
//

நம்ம விருதுக்கெல்லாம் எப்படிங்க மரியாத தருவது.. அசின், நயன்தாராவுக்கெல்லாம் கிடைகிறதையெல்லாம் மதிக்க முடியுமா என்ன..?

இருந்தாலும் நீங்க சொல்லறதுலேயும் ஒரு அர்த்தம் இருக்கு..