Friday, August 22, 2008

தெய்வீக ராகம்.... ஜென்சி

இந்த வார குமுதம் இவ்வளவு நாள் நான் கேட்கும்போதெல்லாம் மெய்மறக்கும் ஒரு தெய்வீக குரலுக்கு முகம் கொடுத்துள்ளது...

ஜென்சி...



'சில்லிட வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வருவதுபோல் இருக்கும்.ஜென்சியின் குரல்.'

எவ்வளவு சத்தியமான வார்த்தை..

`தம்தன தம்தன... தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', ‘மீன் கொடித் தேரில்'.

எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.... இவர் அதிகம் பாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் நாம் நிறைய இழந்துவிட்டோம்!! ஆனாலும் இதுவரை நமக்கு கிடைத்தது எல்லாம் பொக்கிஷங்கள்..




என்னிடம் இவரது பெரும்பான்யானப் பாடல்கள் இருக்கின்றன.. ஆனால் எப்படி இந்த வளைத்தளத்தில் பகிர்ந்துகொள்வது என்று தெரியாததால்..odeo.com வளைத்தளத்தில் கிடைத்த ஒரு தொகுப்பை இங்கு கொடுத்துள்ளேன்.. கேட்டு மகிழுங்கள்!!!













ஜென்சி பாடிய அனைத்துத் தமிழ் பாடல்களும் ஒரு தொகுப்பாக..

(நன்றி: ப்ரசன்னா)

கிடைத்தப் பாடல்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.. சொடுக்கிக் கேட்டு மகிழுங்கள்..

மயிலே..மயிலே.. (கடவுள் அமைத்த மேடை )

மீன்கொடித் தேரில்..(கரும்புவில்)

என் வானிலே.. ஒரே வெண்ணிலா...(ஜானி)

ஒரு இனிய மனது... (ஜானி)

ஆயிரம் மலர்களே.. மலருங்கள்.. (நிறம் மாறாத பூக்கள்)

இரு பறவைகள் மலை முழுவதும்.. ,
இதயம்... போகுதே..,
தம்தன..தம்தன.. தாளம் வரும்.. (புதிய வார்ப்புகள்)

காதல் ஓவியம்... (அலைகள் ஓய்வதில்லை)

தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாசப் பறவைகள்)

அடிப் பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..(முள்ளும் மலரும்)

கல்யாணம் என்னை முடிக்க.. (மெட்டி)

தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)

வாடா என் ராஜாக்கண்ணா.. (ரிஷிமூலம்)

ஆத்தோர காத்தாட.. (எங்கேயோ கேட்ட குரல்)

உனக்கென தானே... (பொண்ணு ஊருக்குப் புதுசு)

கீதா..சங்கீதா... (அன்பே சங்கீதா)

தேவன் திருச்சபை மலர்களே (அவர் எனக்கே சொந்தம்)

பனியும் நீயே..மலரும் நானே.. (பனிமலர்)

ஞான் ஞான் ஆடணும்.. (மலையாளம்) (பூந்தளிர்)

பூ மலர்ந்திட.. (டிக் டிக் டிக்)

வாடி என் கப்பக் கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)

ஆடச் சொன்னாரே (வட்டத்துக்குள் சதுரம்)

வானத்துப்பூங்கிளி.. (திரிபுர சுந்தரி)

தோட்டம் கொண்ட ராசவே (பகலில் ஓர் இரவு)

அக்கா..ஒரு ராஜாத்தி (முகத்தில் முகம் பார்க்கலாம்)

நான் உன்னைத் திரும்ப திரும்ப.. (எல்லாம் உன் கைராசி)

காத்தாடுது ஆசை கூத்தாடுது (கரடி)

என் கானம் இன்று அரங்கேறும் (ஈர விழிக் கனவுகள்)

மணியோசைக் கேட்டதா.. (இருளும் ஒளியும்)

Monday, August 18, 2008

பறிக்கக் காத்திருக்கும் பப்பாளிகள்..

[நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி: நம்மப் பப்பாளி பத்தோடு பதிணொண்னா தேர்வயிடுச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... நாட்டாமைகளுக்கு ஒரு பெரிய 'கும்பிடறேஞ்சாமியோவ்!!']


ரசிகர்களின் ஏகோபித்தப் பாராட்டுக்களால் இந்தப் பப்பாளிப் படத்தையே இந்த மாத PIT போட்டிக்கு அனுப்பியுருக்கேன்.



நம்மப் படத்தப் பத்தி நாட்டாமைகளெல்லாம் என்னச் சொல்லப் போறாங்கன்னுத் தெரியல..

இருந்தாலும் அவங்க சொல்லிக்கொடுத்த மூணு முக்கியமான விஷயங்கள் எந்தளவுக்கு இந்தப் படத்துல வந்திருக்குன்னு நானே ஆராய்ஞ்சுப்(?) பாத்ததுல நம்ம சிற்றறிவுக்கு எட்டியது..

1) Rule of thirds..
இதுல நம்மப் படம் பெயிலுன்னுதான் தோணுது. பப்பாளி நட்டநடுவால இருக்கறதால.. கோடுகள் சந்திக்கும் இடத்துல முக்கியமான பொருள் பப்பாளி இல்லை.. இருந்தாலும் சிலப் படங்கள் நல்லா வரணும்னா சில சட்டங்களை மீறுனாலும் பரவாயில்லன்னு நாட்டாமைகளே சொல்லியிருக்கறதால மன்னிச்சுருவாங்கன்னு நம்பறேன்.

2) Composition
இதுல நம்மப் படம் தப்பிச்சிரும்னு நம்பிக்கை இருக்கு.. இன்னும் கொஞ்சம் பக்கத்துல போனா இலைகளெல்லாம் தெரியல.. தூரமா வந்தா பக்கத்திலிருக்கும் மரங்களின் இலைகள் தெரிந்தது அப்புறம் பப்பாளியும் தெளிவாத் தெரியல.. ஆனா இந்த composition-ல ஒரு symmetric persception கெடச்சிருக்குன்னு தோணுது. அப்புறம் இலைகளெல்லாம் இயற்கையாகவே ஒரு shade தந்திருக்கு..

3) Leading lines
இங்கதான் நம்மப் பப்பாளி கலக்கிருச்சு.. மரத்தண்டு நம்மப் பார்வையை அப்படியே மேலத் தொங்கற ரெண்டு பப்பாளிக்கும் கொண்டு சேக்குது.. பெரியப் பெரிய மரங்களை அண்ணாந்து பாக்கும் போது இந்த leading lines concept தான் ஒரு பிரமிப்பைத் தருதுன்னு நெனைக்கிறேன்.

சரி.. நம்மப் படத்தப் பத்தி நாமே சுயத்தம்பட்டம் அடிச்சுக்கக் கூடாதுன்னாலும்.. போட்டியிலிருக்கற மத்த படங்கள பாக்கும்போது முடிவு அறிவிக்கறதுக்குள்ளார ஆடிச்சாத்தான் ஆச்சு.. அதனால தயவுபண்ணி பொருத்துக்குங்க..

வந்ததே வந்தீங்க.. இன்னும் கொஞ்சம் பப்பாளிப் பழங்களை ஆசை தீரப் பாத்துட்டுப் போங்க...

அதே பப்பாளிகள்.. இன்னும் பக்கத்துல..


ஒரே ஒரு பழுத்துச் சிவந்தப் பப்பாளி.. இத அப்பவே பறிச்சுச் சாப்ட்டாச்சுங்கோவ்..


...................??!!


(அப்பாவி ஆறுமுகம்: தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்..? ஒண்ணுமே புரியல..!)

Friday, August 15, 2008

நிஜ சூப்பர் ஸ்டார்!!!

இந்த வார விகடன் ஒரு 'நிஜ' சூப்பர் ஸ்டார் பற்றியக் கட்டுரை வெளியுட்டள்ளது...
இதுவரை படிக்காதவர்கள், கண்டிப்பாகப் படிக்கவும்.

இளங்கோ போன்ற இந்த நிஜ சூப்பர் ஸ்டார்களால்தான் தமிழனின் வாழ்வு இன்னும் உயரப்போகிறது. இவரை போன்றோர்களால் தான் 2020 யில் இந்தியா வல்லரசாகும் கனவு, நிஜமாகப் போகிறது.

இவரைப் போன்றோரின் சாதனையை உலகுக்கு அறிவிக்கும் விகடனுக்கு நன்றிகள் பல...



அந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்...

-----------------------------
....குத்தம்பாக்கம் கிராமம்!

இன்று பாசமும் ஈரமுமாகப் பசுமை பேசும் அந்த மண்ணில், மற்றவர்கள் கால் வைக்கவே பயந்து நடுங்கிய காலம் ஒன்று உண்டு. பெயரிலேயே குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த கிராமத்துக்கு அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி ஸ்தலம். கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது!

எப்படி நடந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்..? கேள்விக்கு விடையாய், வெளிச்சமாய் வந்து என் கை குலுக்குகிறார் இளங்கோ. குத்தம்பாக்கம் பஞ்சாயத்து அகாடமி தலைவரான இளங்கோவை இன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் 'வந்துட்டுப் போங்களேன் சார்' எனப் பேச அழைக்கின்றன.
------------


'குற்றங்களும் தவறுகளும் எங்கே சார் உருவாகுது... வேலையில்லாததும் வறுமையும்தானே முதல் காரணம். நோய் என்னன்னு தெரியாம, மருந்துக்கு அலைஞ்சா எப்படிச் சரியாகும்? அதைக் கண்டுபிடிச்சு சரி பண்ணினதுதான் மாற்றத்துக்கான முதல் விதை. குடிசைகள்தான் கூடாது. கிராமங்களுக்கு குடிசைத் தொழில்கள் அவசியம் வேணும். அதை உருவாக்கி இந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தந்தோம். எங்க ஊர்ல விளையுற நெல்லை அரைக்க, நாங்களே ரைஸ் மில் ஆரம்பிச்சோம். துவரம்பருப்பை பாலிஷ் போடும் தொழிற்சாலையிலிருந்து வீடு கட்டப் பயன்படுத்தும் கட்டடப் பொருட்கள் வரை அத்தனையையும் நாங்களே தயாரிக்கிறோம். ஊர்ல காய்க்கிற தேங்காய்களில் இருந்து மொத்தமா எண்ணெய் எடுக்கிறோம். எண்ணெயில் இருந்து சோப்பு தயாரிக்கிறோம். மண்ணெணெய் ஸ்டவ்விலிருந்து தெரு விளக்குகளைப் பொருத்தத் தேவையான அலுமினியக் கூடுகள் வரை செஞ்சு வெளியூர்களுக்கு சப்ளை பண்றோம்.
----------

இளங்கோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். 'சார், இது என் சொந்த ஊர். என்னை வளர்த்த மண். கெமிக்கல் இன்ஜினீயரா நான் நல்லா இருக்கேன். ஆனா, என் ஊர் அப்படியே இருக்குதேன்னு வருத்தப்பட்ட நான், வேலையை வீசிட்டு ஊருக்கே வந்தேன். சாராயமும் சாதிச் சண்டையுமா கிடந்த கிராமத்தில் என்னால் முதலில் எதுவும் பண்ண முடியலை. அதிகாரம் கையில் இருந்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்னு தோணுச்சு. தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆனேன். ஆரம்பத்தில் என்னை எதிர்த்தவங்ககூட என் நல்ல நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஊர் நன்மைதான் முக்கியம்னு ஒவ்வொரு வங்கியா ஏறி இறங்கினேன். அரசாங்கத்தின் ஒவ்வொரு கதவையும் ஓயாமத் தட்டினேன். அரசிலும் வங்கிகளிலும் என்னவெல்லாம் திட்டங்கள் இருக்கோ, அத்தனையையும் குத்தம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தேன். நினைச்சது நான்... ஆனா, ஊரே ஒண்ணு கூடி நடத்திக்காட்டினாங்க. இன்னிக்கு, சுத்துவட்டாரமே மரியாதையா, முன்னோடியாப் பார்க்கிற அளவுக்கு குத்தம்பாக்கத்தைச் சுத்தம்பாக்கம் ஆக்கிட்டோம்!'' என்கிறார் இளங்கோ நெகிழ்ச்சியாக!
---------------

Thursday, August 14, 2008

TR - The Terror!!!!!!!

இதுவரைக்கும் பாக்கலைன்னா, கண்டிப்பா பாருங்க மக்களே...
ரொம்ப பயமாயிர்ந்துச்சுன்னா பின்னாடி கைத் தட்டுற ஆளப் பாத்துக்கோங்க..

வீடியோ கீழேத் தெரியலைன்னா, இங்க சொடுக்குங்க..

Wednesday, August 13, 2008

பப்பாளி... (பிட்டு படம்)

ஒரு வருடத்தைக் கடந்து என்னைப் போன்ற பல புகைப்பட ஆர்வலர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் 'தமிழில் புகைப்படக்கலை' குழுவினர்க்கு முதலில் மனமார்ந்த நன்றி...

இவ்வளவு நாளாக மாதாமாதம் ஒரு தலைப்பைக் கொடுத்ததால், போட்டிக்கான புகைப்படம் தெரிவு செய்வது, கடிவாளம் போட்ட குதிரை சவாரி போல், சிறிது வசதியாக இருந்தது. இந்த மாதம் கடிவாளத்தை நீக்கியதும், ஒண்ணுமே புடிபடலை.

இப்பக் கொஞ்ச நாளாத்தான் கேமராவத் தூக்கிட்டு படம் காமிச்சிட்டு இருக்கறதால எடுக்கிற எல்லாப் படமும் அருமையாதான் தெரிகிறது. இதுல எத போட்டிக்கு குடுக்கிறதுன்னு ஒண்ணும் புரியல. அங்கேயும் இங்கேயும் சிலரிடம் கேட்டும், flickr - ல வந்த ஒண்ணு ரெண்டு பின்னூட்டங்கள வெச்சும், இந்த 5 படங்கள தெரிவு செஞ்சுருக்கேன்.

ஐந்தாவது:

இந்தத் தடவ ஊருக்குப் போன போது என் மருமகப்பொண்ணு அஷ்விகா தண்ணில விளையாடிட்டிருக்கும் போது எடுத்தது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா நல்லா வந்திருக்கும்.




நாலாவது:

பாப்பாளி மரத்த ஏதேச்சயா அண்ணாந்து பாத்தப்ப தெரிஞ்ச அழகு.. அத அப்படியே படம் புடிச்சுப் பாத்தா இன்னும் அழகா இருந்துச்சு. மரங்கள அண்ணாந்து பாத்தா பெரும்பாலும் பிரமிப்பாவும், அழகாகவும் இருக்கும். இன்னும் அந்தப் பிரமிப்பை புகைப்படத்தில் கொண்டுவர முடியவில்லை. குறைந்தபட்சமா இதில் அந்த அழகையாவது கொண்டுவந்திருக்கிறதா நம்பறேன்.

(ரசிகர்களின் ஏகோபத்திய ஆதரவைத் தொடர்ந்து, இந்தப் பப்பாளியும் போட்டியில் கலந்துகொள்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.... )(கரவொலியோசை விண்ணைப் பிளக்கிறது!!!)



மூணாவது:

நூறு வயச கடந்த தாத்தாவும், தொண்ணூறு வயசக் கடந்த பாட்டியும்... இன்னும் அதே காதலுடன் யாருடைய உதவியும் இல்லாம தனியா வாழ்ந்திட்டு இருக்காங்க. என்னுடய தூரத்துச் சொந்தம். இவர்களிடம் பேசிய அந்த சில மணி நேரங்களில் கற்றுக் கொண்டது : Priceless!



இரண்டாவது:

குழந்தைகளுடன் விளையாடுவதும், அவர்கள் விளையாடுவதை ரசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் முக்கியமான ஒன்று. உடலும், வயதும் எப்பவுமே குழந்தையாகவே இருக்க ஒத்துழைக்காத போதும், மனதளவில் இருக்க இது மிகவும் உதவுகிறது. கடைசிவரை இப்படத்தையே போட்டிக்கு அனுப்ப நினைத்திருந்தேன்.



முதல் (போட்டிக்கு):

அந்திமாலை.... ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்காக திரையிடும் சொர்க்கத்தின் முன்னோட்டம் (Heaven's trailer). என்னுடைய முதல் HDR முயற்சி.
இதுவரை ஒரு 200 படங்களுக்கு மேல் அந்தி சாய்வதை எடுத்துள்ளேன். அதில் எல்லாமே எனக்குப் பிடித்தவை. அதில் இதுவும் ஒன்று.

Friday, August 8, 2008

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்.

என்னுடைய 'அதிக விவரம்' இல்லாத 6-7 வகுப்பு வரையிலான வயதில், என் வயதொத்த மற்றப் பசங்களைப் போல நானும் மிகத் தீவிர ரஜினி ரசிகன். அவரது ஸ்டைலிலும், ஆக்‌ஷனிலும் மெய் சிலிர்த்தவர்களில் நானும் ஒருவன். 'மிஸ்டர் பாரத்' படம் வந்த சமயத்தில் தியேட்டர்ல ரஜினிக்குச் சரிசமமாக சத்யராஜின் ரசிக மன்றங்களின் தோரணங்களைக் கண்டு கோபமடைந்திருக்கிறேன். இவ்வளவு கெட்டவனுக்குப் போய் இப்படியெல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்களே..' என்று வருத்தமும் அடைந்ததுண்டு. 'நம்ம ரஜினி உடற ஒரே உதைல சத்யராஜ்லாம் தூள் தூள்றா' -ன்னு நண்பர்களுடன் வீர வசனம் பேசியதுண்டு. படிக்காதவன் படத்துல வர “ஊரத் தெரிஞ்சுக்கிட்டென், உலகம் புரிஞ்சுகிட்டேன் என் கண்மணி” -ன்ற பாட்ட 'தலைவரோட' ஸ்டைலிலேயே தண்ணி அடிச்சுட்டு ஆடர மாதிரி பாடி அப்பாக்கிட்டத் திட்டு வாங்கியதும் உண்டு.

விவரம் தெரியத் தெரிய, சினிமாவிற்கும் நிஜத்திற்கும் வேறுபாடுகள் புரிய ஆரம்பித்தவுடன் நடிகர்கள் வெறும் நடிகர்களாகவேத் தோன்றினார்கள். மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ், பாசில் (எத்தன ‘பா'!!!!) போன்ற இயக்குனர்கள் உண்மையான திறமையாளர்களாகத் தோன்றினார்கள். 'ரஜினி ரசிகனாக' இருந்தபோது அவ்வளவாய் பிடிக்காததிருந்த ‘ஆறிலிருந்து அறுபது வரை', ‘எங்கேயோ கேட்ட குரல்', ‘புதுக்கவிதை', ‘முள்ளும் மலரும்' போன்றப் படங்கள் பிடிக்க ஆரம்பித்தது. சரியா சொல்லனும்னா ‘புரிய' ஆரம்பித்து. என்னைப்பொருத்தவரை அந்தப் படங்களில் ரஜினியேற்ற பாத்திரங்களில் வேறு யாரலும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
குறிப்பாக தங்கச்சியின் மேல் முரட்டுத்தனமான பாசம் கொண்ட அண்ணனாக ரஜினி வந்த ‘முள்ளும் மலரும்' ஒரு காவியம் என்றால் மிகையாகாது.

அப்புறம் எங்கேயோ தவறு நடந்து ரஜினி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டாரோ என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் அந்த வட்டத்திலேயே இவ்வளவு ரசிகர்களும் சிக்கிக்கொண்டார்கள் என்பது என்னைப் போன்ற யதார்த்த திரைப்பட ரசிகர்களுக்கு வேதனையானச் செய்தி.

ஆனால் அந்த வட்டத்தில் உள்ள ரசிகர்களின் வாதமும் தவறானதில்லை. தினம் தினம் வாழ்க்கையில் போரடிக்கொண்டிருக்கும் வேலையில், திரைப்படம் தான் சராசரி ரசிகனுக்கு ஒரே பொழுதுபோக்கு. அந்த 2 1/2 மணி நேரமாவது 'புத்திக்கும்', மனதிற்கும் ஓய்வு கொடுத்து, நன்றாக சிரித்து விட்டு, தன்னுடைய கவலைகள் எல்லாவற்றயும், ரஜினி படங்களில் செய்வது போல் 'சுத்தி சுத்தி' உதைத்துவிட்டு மன நிறைவுடன் தியேட்டரை விட்டு வெளியே வருகிறான்.

தனது வாழ்க்கையில் நடப்பதையே திரையிலும் காண்பதில் விருப்பம் இல்லாததில் எந்தத் தவறுமில்லை. தவறு எங்கேயென்றால், திரையரங்குக்குள் புத்தியை இழக்கும் ரசிகன், வெளியிலும் இழந்துவிடுகிறான் என்பதில்தான். கட் அவுட் வைப்பதும், ‘பாலபிஷேகம்' செய்வதும், முதல் நாள் படம் பார்க்க முடியாமல் போனால் ரயில்ப் பாலத்தில் விழுந்து சாவதும், அவர்கள் முட்டாளாகிவிட்டார்கள் என்பதுக்கான சாட்சிகள். அவரை வழி நடத்தும் பொறுப்பிலிருக்கும் அவர்களது தலைவனும் ரசிகர்களின் இந்த முட்டாள்த்தன செய்கைகளினால் பணம் சம்பாரிப்பது எளிதாகிவிட்டதால் அதையே ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டார்கள். மேலும் கொடுமை என்னவென்றால், இந்தத் தலைவனைப் பார்த்து, புற்றீசல் போல பல ‘லிட்டில்', ‘இளைய' தலைவர்களும் உருவாகிக்கொண்டிருப்பதுதான்.



இந்த ரசிகர்களை இப்படியே வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கில் ரஜினியை வைத்து இயக்கும் இயக்குனர்கள் அவரது பாத்திரங்களை முட்டாளாக்கினார்கள். அவரை பொம்பளைகளிடம் சவாலிடும் ‘வீரனாக' சித்தரித்து, ‘பொம்பளைனா அப்படியிருக்கனும், இப்படியிருக்கனும்' -னு வசனங்களையும், கேனத்தனமான ‘பஞ்ச் டயலாக்குகளை' கொடுத்தும் 'விசிலடிச்சான்' ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்கள்.

ரஜினி என்னைப் பொருத்தவரை மிக நல்லவர். ஆனால் நமது சமுதாயத்தில் நல்லவனுக்கும் முட்டாளுக்கும் இருக்கும் இடைவெளி மிகக்குறைவு. என்னைப் பொருத்தவரை ரஜினியை சுற்றியிருப்பவர்கள் அவரின் நல்ல குணத்தைப் பயன்படுத்தி வடிகட்டிய முட்டாளாக்கி விட்டார்கள். ஒருமுறை தலைமுழுதும் மொட்டையாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அமெரிக்காவில் ஒரு சலூனில் முடி வெட்டும்போது தூங்கிவிட்டதால் தன்னை மொட்டையடித்து விட்டதாக அவரேச் சொன்னார். அதுதான் அவரது திரைப்பட வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.



தனிமனித போற்றுதலும், காவடி தூக்குவதும், தலைவனாக்குவதும் நம்ம ரத்தத்திலேயே ஊரியது. யாரலும் மாற்ற முடியாது. தாள முடியாத பிரச்சினைகளிலும், தீர்க்க முடியாத துக்கங்களிலும் நாள்தோரும் அல்லல் படும் சராசரி ரசிகன் ஒரு 'சூப்பர் பவரால்' தன்னைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தால் தான் என்னவோ இந்த மாதிரி சூப்பர் ஸ்டார்களால் தலைவனாக முடிகிறது.

ஒரு இனத்தை, மொழியைக் காக்க வேண்டுமெனில், உலகம் போற்றும், காலத்தால் அழியாத படைப்புகள் அந்த மொழியிலிருந்து வந்து கொண்டேயிருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இன்னோரு திருக்குறளோ, பாரதியோ வந்து உலக கவனத்தை ஈர்க்க முடியாது. ஆனால் இரானியம், வங்காள படங்களைப் போல் தமிழிலும் உலக கவனத்தை ஈர்க்கும் படங்கள் வந்தால், தமிழ் மொழியின் புகழ் பரவவும், தமிழ்ப் பேசுவதை நமது அடுத்தத் தலைமுறை தலைகுனிவாக கருதுவதையும் ஒரளவேனும் தடுக்கலாம்.

காதல், பருத்திவீரன், கல்லூரி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் வந்து ரசிகர்களின் ரசனையை கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்திக் கொண்டிருக்கும் போது, 'சிவாஜி', ‘குசேலன்', ‘குருவி' போன்ற படங்கள் ஒரு சாபக்கேடு.

தற்போது நிறைய பதிவர்களும், ஞானி போன்ற எழுத்தாளர்களும், ரஜினியைப் பற்றி எழுதுவதே, ரஜினி தனது புகழை பயன்படுத்தி, கொஞ்சமாவது தனது ரசிகனின் ரசனையை உயர்த்தமாட்டரா என்ற அங்கலாப்பில்தான். ரஜினி நினைத்தால் கண்டிப்பாக இது முடியும். மாறிக்கொண்டிருக்கும் ரசிகர்களின் ரசனைய சரியாக பயன்படுத்த ஒரு அருமையான வாய்ப்பு இந்த குசேலன் படம். “கத பரையும் போல்” படத்தை அப்படியே சீனிவாசனை இயக்கச் சொல்லி, முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி, எந்த விளம்பரமும் இல்லாமல் தானே தயாரித்து வெளியிட்டிருக்கலாம். யதார்த்தமாக படம் பார்க்கச் செல்லும் ரசிகன், படத்தில் ரஜினியின் எதிர்பாராத தோற்றமே வெகு விளம்பரமாகியிருக்கும். அப்படி இந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால் ரஜினி உண்மையாகவே சூப்பர் ஸ்டார்.

Tuesday, August 5, 2008

'விர்த்தி கெட்ட தமிழனுக்கு சூல்'

சில ஆண்டுகள் முன்பு, மலையாள சேனல் ஒன்றில் நகைச்சுவைத் தொடர் ஒன்று. மலையாளத்தில் 'சூல்' எனில் விளக்குமாறு என்று பொருள். வரிசையாகப் பாடிக்கொண்டு வந்தார்கள், யார் யாரை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும் என்று. அதில் ஒரு வரி, 'விர்த்தி கெட்ட தமிழனுக்கு சூல்' என்பது. 'விர்த்தி' எனில் சுத்தம் என்று பொருள்.
- நாஞ்சில் நாடன் ('தீதும் நன்றும்!' ஆனந்த விகடன் 30-07-08)

சென்னைப் போன முதல் நாள், விமான பயணத்தில் தூக்கம் கெட்டுப் போனதால் விடியல் காலையில் எழுந்து பீச் போலமென்று சென்றேன். போன பின் தான் அது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்தது.

எங்கு பார்த்தாலும் குப்பை.. ப்ளாஸ்டிக் கவர்கள்...

நிறைய படங்களில் பார்த்த அந்த 'Karl Schmidt Memorial' கட்டிடம் பரிதாபமாக இருந்தது.

Sad state of Karl Schmidt Memorial

இந்த குப்பைகளுக்கும் கண்றாவிகளுக்கு மத்தியிலும் நிறைய பேர் வாக்கிங் போவதும், யோகா செய்வதுமாக இருந்தது ஆச்சர்யம்.

Pranayama..?

பீச்சின் இரண்டு பக்கமும், சுமார் ஒரு பத்து, பதினைந்து தடியன்கள் வரிசையாக கடலைப் பாத்துட்டு உட்கார்ந்திருந்தார்கள். என்னடா செய்ராங்கன்னு பாத்தா... அடக்கண்றாவி.. எல்லாம் 'போய்'ட்டிருந்தானுங்க.. அடப்பாவிகளா.. ஒரு ஓரமாவது போகக்கூடாது... நட்ட நடுவுல...

Yoga..?

இந்தப் படத்துல யோகா (?) பண்ணிட்ருக்கற ஆளுக்குப் பின்னாடி பாத்திங்கன்னா புரியும்..

தினமல(ம்)ர்ல இந்த மாதிரி காதலர்கள அடிக்கடி படம் பிடிச்சு, எதோ இவங்களாலதான் நம்ம ‘கலாச்சாரம்' கெடர மாதிரி போடரானே, இந்த மாதிரி கண்றாவிகளையும் போட்டாத்தான் என்ன?


விகடனில் நாஞ்சில் நாடன் சொன்னது எவ்வளவு உண்மை!

இதுவா நம் தமிழ் கலாச்சாரம்?