Saturday, May 15, 2010

அங்காடித் தெரு - எண்ணங்கள்

ஓவ்வொரு முறையும் 'Children of Heaven' மாதிரிப் படங்களப் பாக்கும் போது, இந்த மாதிரி எத்தனை எத்தனையோக் கதைகள் நம்ம ஊர்லயும் இருக்கே.. யாருமே இந்த மாதிரி ஒரு படம் எடுக்க மாட்டேங்கறாங்களே அப்படின்னு ரொம்ப அங்கலாப்பா இருக்கும்..

எப்பவாது வர யதார்த்தப் படங்களப் பாத்தா.. நல்லக் கதை இருந்தாலும், ஒண்ணாத் திரைக்கதை ரொம்பக் கொடுமையா இருக்கும் இல்ல வன்முறை ரொம்ப அதிகமா இருக்கும், இல்லன்ன ஓவரா சோகமா (melodrama) இருக்கும்..

'போக்கிரி', பேக்கிரி', ‘வில்லு', ‘பில்லு.. பில்லா', 'பல்லி', 'குருவி', ‘சுறா', ‘திமிங்கலம்' ன்னு அந்த மாதிரிப் படங்களின் ரசிகர்களுக்கு மட்டும் திகட்ட திகட்ட படங்கள் வரிசயாப் பண்றாங்களே.. நமக்குன்னு சொல்லிக்கற மாதிரி படங்கள் வரவே மாட்டேங்குதேன்ற ஏக்கத்தப் போக்குற மாதிரி.. 'அங்காடித்தெரு'



எப்பவாவது வீசுற வசந்தம் மாதிரி... வசந்தபாலன் ‘அங்காடித் தெரு'-ங்கற இந்தப் படத்தக் குடுத்துருக்காரு..

இனி.. இந்தப் படத்த உருவாக்கின, நடித்தவங்கக்கிட்டயெல்லாம் நேரடியாப் பேச முடியாட்டிப் போனாலும் இவங்கள சந்திச்சா என்னப் பேசலாம்ன்னு தோன்ற எண்ணங்களைப் பதிவாய்...


ஐங்கரன்


மொதல்ல..இப்படியொரு படத்தத் தயாரிச்ச ஐங்கரனுக்குப் பெரிய நன்றி!!! இந்தப் பேட்டியில அருண்பாண்டியன் சொன்ன மாதிரி.. இனிமே இதே மாதிரி நல்லப் படங்களாக் கொடுத்தீங்கன்னா என்ன மாதிரி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்..



வசந்தபாலன்:

கை கொடுங்க பாலன்... உங்களுடய இந்தப் பேட்டியிலேயே என்னுடையப் பலக் கேள்விகளுக்கு விடைக் கெடச்சிருச்சு.. இந்தப் படத்துக்காக எவ்வளவு மெனக் கெட்டிருகீங்கன்னுப் புரியுது.. உங்களுடய முயற்சிக்கும், அற்புதமான ரசனைக்கும் இனி எப்பவுமே இதே மாதிரி வெற்றி கிடைக்கும்.. இன்னும் இதே மாதிரிப் பல நல்லப் படங்களத் தந்தீங்கன்னா எங்கள மாதிரி ரசிகர்களுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்..

ஒரு சமூகம் நிலைத்திருக்கணும்னா நல்ல இலக்கியங்கள் ரொம்ப அவசியம்.. இப்பவெல்லாம் திரைப்படங்கள்தான், வேற வழியில்லாம, பெருபான்மையான மக்களுக்கு இலக்கியமா இருக்க வேண்டிய சூழ்நிலை.. நம்மத் தமிழ் மொழிய இன்னும் உலகம் முழுதும் எடுத்துச் சொல்லறதுக்கு திரைப்படங்கள் ஒரு எளிதான ஊடகம்.. ஆனத் திரைப்படங்கள இப்பெல்லாம் இலக்கியமா யாரும் படைக்கறதில்லை.. ஏன்னா அது எளிதானக் காரியமும் இல்ல..
நல்லாக் கதையெழுதறவங்களே இப்பப் படத்தயும் இயக்கி அவங்களே வசனமும் எழுதி (தொழிலில் போட்டி, யார் மேலயும் நம்பிக்கை வைக்க முடியாத சூழ்நிலை தான்னு நினைக்கிறேன்), கலைப்படமா வியாபாரப் படமான்ற குழப்பத்துல கொஞ்சம் சொதப்பலா நிறையப் படங்கள் வந்து தோத்துப் போயிடுது..
ஆனா நீங்க அதிலெல்லாம் ரொம்பக் கவனம் செழுத்தி அட்டகாசமாப் படைச்சிருக்கீங்க.. ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம்.. எப்படியாவது இளையராசாக்கிட்ட இந்தப் படத்தக் கொடுத்துப் பிண்ணனி இசைப் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்..

ஒரு சாதாரணமானவனை பெரியாளாக்கிக் காட்டணும்னு நீங்கப் போராடியதும்.. பாலச்சந்தர் மாதிரி நானும் பலப் பெரிய நடிகர்ளை அறிமுகப் படுத்தனும் என்ற உங்களோட எண்ணமும், அதுக்கு உங்களுடய முயற்சியும்.. எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினை.. இவ்வளவு நல்ல எண்ணங்களையும் உழைப்பையும் கொண்ட உங்களுக்குக் கண்டிப்பா எல்லாம் வெற்றியாகத்தான் அமையும் என்பது உறுதி..




மகேஷ்:


உன்னை வசந்தபாலன் தேடிக் கண்டுபிடிச்ச இந்த காணொளிகளே ஒரு அட்டகாசமானக் கவிதை.. முதல்ல உன்ன வந்து கேக்கறப்ப.. ‘வீட்டுல வைவாக' -ன்னு நீங்க விலகிப் போறத உன் வாழ்க்கை முழுசும் நீயும் மறக்க மாட்டாய் நாங்களும் மறக்க மாட்டோம்.. உன்னோட அந்த யாதார்த்தமும் வெகுளித்தனமும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்குமோ.. ஆனால் இது - Priceless.. பாதுகாத்து வெக்க வேண்டியப் பொக்கிஷம்..
உன்னுடையச் சித்தப்பாவோட இந்தக்கோபம் இப்பத் தவறாத் தெரிந்தாலும் என்னைப் பொருத்தவரைக்கும் அவர் உன் மேல் வெச்சிருக்கற அபரிதமான அன்பின் வெளிப்பாடாதான் நான் நினைக்கிறேன்.. உன்னுடய தந்தையையும், தாயின் பரிசுத்தமான அன்பையும் பாத்தப்ப என்னையறியாம அழுதுட்டேன்.. இவங்களுக்காகவாவது நீ பல வெற்றிகளைப் பெறணும்.. பெரிய ஆளா வரணும்ன்னு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்..

கடைசியா... ஆனா முக்கியமா..


அஞ்சலி

என்னம்மா இப்படிப் பண்ணிட்ட.. ரெண்டு நாளா 'அஞ்சலி' கிறுக்குப் பிடிச்சுல்ல அலைய வெச்சுட்ட..
இந்தப் படத்துல உன்னுடைய ஒவ்வொரு முக அசைவும் கவிதை...
குறிப்பா.. லிங்கு ராணிக்கு லெட்டர் கொடுக்கரப்ப காட்டற அதிர்ச்சியும், அது அவனோட நண்பன் சார்ப கொடுக்கரதுன்னு தெரிஞ்சது ‘அதானப் பாத்தேன்' ,ங்கரதுக்குக் காட்டிய நடிப்பு..வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.. அசத்தல்ம்மா..

ஸ்ரீதேவி, நதியா, ரேவதி, சினேகா வரிசையில் நீயும் கண்டிப்பாக வரலாம்..
ஆனா அதுக்கு 'ஆயுதம் செய்வோம்' மாதிரி உன்னக் கேவலப் படுத்திக் காட்டற காட்ட்சியமைப்பு இருக்கற படத்துல எல்லாம் நடிக்காம இருக்கணும்.. கவர்ச்சியாக நடிக்கறதுக்கு உங்கிட்ட அழகில்லாமல் இல்லை.. ஆனா அப்படி நடித்தாலும் உன்னுடைய அழகைத் தரமிறக்காமல் (உதாரணம்: தெலுங்கு போக்கிரி - இலியானா) இருக்கற மாதிரி படங்களாத் தேர்வுசெஞ்சா நிலைத்திருக்கலாம்..

நல்லாத் தமிழிப் பேசற, அழகாகவும் (அழகுன்ற வார்த்தை பத்துல.. புதுசா தமிழ்ல ஏதாவது வார்த்தை கண்டுபிடிக்கணும்), நடிக்கவும் தெரியற ஒரு நடிகையப் பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி!!!




படம் எப்பவே வந்திருந்தாலும்.. இங்க எங்கேயும் வெளியிடாததால பாக்க முடியல... எல்லோரும் நல்லப் படம்னு சொன்னதால விமர்சனம் எதுவும் படித்துக் கதையைத் தெரிஞ்சுக்கல.. இப்பதான் ஒருத்தளத்துல தரவிறக்கம் பண்ணக் கிடச்சுது.. பாத்ததிலிருந்து மனசுக்குல்ல இருக்கற திருப்தியும் சந்தோசமும்.. அப்பாடா..!! அடுத்த மாசம் ஊருக்கு வந்ததும் திரையரங்குப் போய் பாத்தே ஆகனும்..

நாளைக்கு என்றப் பையன், பொண்ணு, பேரம்பேத்திகளுக்கெல்லாம் நம்ம மக்களையும், கடந்து வந்தப் பாதையும் காட்டறதுக்குக்கான ஒரு சிலப் படங்ள்ல கண்டிப்ப ‘அங்காடித் தெரு'-வும் ஒண்ணு..

படங்கள்: நன்றி சென்னை365

2 comments:

Sweatha Sanjana said...

அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

அன்புடன் மலிக்கா said...

விமர்சனம் அருமை வாழ்த்துக்கள்..