Saturday, September 13, 2008

கட்டிடக்கலை - PIT மெகாப் போட்டி

”கட்டிடக்கலை” தலைப்புக்காக நான் எடுத்தப் படங்கள்ல ஆறு படங்கள் உங்கள் வோட்டுக்காக..
இதில் எந்தப் படத்தை போட்டிக்கு அனுப்புறதுன்னுத் தெரியலை..
உங்களுக்கு எது புடிச்சிருக்குன்னு சொன்னீங்கனா ரொம்ப உதவியா இருக்கும்..
------------------------------------------------------------------

பதிவிற்கு வந்து வோட்டளித்தவர்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கும் நன்றி..

ஆறு படங்களில், மூன்றைத் தெரிவு செய்து.. மேலும் சுயவிமர்சனம் செய்து பார்த்ததில்..

படம் 3:

இரவு நேரத்தில் முக்காலி வைத்து எடுத்தது.. மிக நன்றாக வந்திருந்திருக்கிறது.. படத்திலிருக்கும் இந்த இடமும் மிகவும் பிடிக்கும். Technical - ஆகவும், பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ‘கட்டிடக்கலை' என்ற தலைப்பில் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இல்லை என்று கருதுகிறேன்.




படம் 2:

மிகவும் பிடித்த படம்.. இந்தப் படத்தில் 2 leading lines சூரியனின் ஒளிக்கீற்றும், மண்டபப் பாதையும்.. 'கடவுள் அவ்வப்போது வேறு நல்ல ஒளிமயமான மாற்றுப்பாதைகளை காட்டுவார்.. ஆனால் சில நேரங்களில் அவற்றை கவனிக்காமல் நமக்கு விதித்தப் பாதையிலேயே நாம் செல்வோம்' - இது இப்படத்தினால் எனக்குத் தோன்றிய தத்துவம்... (என்னக் கொடுமை சரவணன்...?) மறுபடியும் 'கட்டிடக்கலை' என்ற தலைப்பிற்கு இன்னும் முழு பொருத்தமாக இல்லையோ என்றே நினைக்கிறேன்..




படம் 1: (போட்டியில் பங்கேற்பது)

2 ஓட்டுகள்(!) பெற்று வெற்றி பெற்ற படம். ‘பெரும்பான்மையோரின்' கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்..!!

நமது கோயில்களில் உள்ள கட்டிடக் கலையின் அழகை எப்போது பார்த்தாலும் வியப்பதுண்டு.. அதே சமயத்தில் கவனிப்பாரற்றும், பராமரிப்பற்றும் சிதிலமடைந்து காணப்படும் பல கோயில்களைப் பார்க்கும் போது மனம் கனக்கும். இங்கு அமெரிக்காவில், நம் நாட்டுக்கோயில்களில் உள்ள கட்டிடக்கலையின் அற்புதத்தில் பாதி கூட இல்லாத கட்டிடங்களை, தலையில் தூக்கி வைத்து ஆடும் போது அங்கலாப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கும்.

துள்ளியமாகவும், அவ்வளவு அழகாக இல்லாமல் போனாலும், நம் நாட்டின் கட்டிடக் கலையின் பெருமையையும், கவனிப்பாரற்று கிடக்கும் நிலைமையையும் இப்படம் சிறிதளவேனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.

அதனால் நெல்லையப்பர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எடுத்த இப்படத்தையேப் போட்டிக்கு...




இன்னும் கொஞ்சம் மெருகேற்றிய பின்..






மற்றப் படங்கள்..











8 comments:

வடுவூர் குமார் said...

படம் 2.

ராஜ நடராஜன் said...

எனக்கு 1 + 2 .

நந்து f/o நிலா said...

தலைவா அந்த 5வது படம். கலக்கல்.

சரண் said...

வடுவூர் குமார் said...
//படம் 2.//

இந்தப் படம் ஆயிரங்கால் மண்டபத்தில் எடுத்தது. எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை முடிந்தவரை கொண்டுவந்திருக்கிறேன்.

வருகைக்கும் வோட்டுக்கும் மிக நன்றி..

சரண் said...

ராஜ நடராஜன் said...
//எனக்கு 1 + 2 .//

முதல் படத்தில் உள்ளக் காட்சி மிகவும் அனுபவித்து எடுத்தது. பார்த்தவுடன் கவருவதாக இல்லாவிட்டாலும் சிறிது கவனித்தால் சில கருத்துக்கள் தோன்றுகிறது..

வருகைக்கும் வோட்டுக்கும் நன்றி..

சரண் said...

நந்து f/o நிலா said...
//தலைவா அந்த 5வது படம். கலக்கல்.//

இந்த இடம் மிகவும் ரொமெண்டிக்கான இடம். இரவு காட்சிகளை எடுப்பதற்கு இப்போதுதான் ஒரு முக்காலி வாங்கியிருக்கேன். படமும் மிக நன்றாக வந்திருக்கிறது.

வருகைக்கும் வோட்டுக்கும் ரொம்ப நன்றிங்க நந்து...

MSATHIA said...

4 -வது படமும் கடைசி படமும்தான் என்னோட தேர்வு. appreciating the architecutre அதுல நிறையவே இருக்கு. மற்ற படங்களும் அருமை. ஆனா அதில் மற்ற சங்கதிகளும் நிறையவே கலந்து இருக்கு.

சரண் said...

sathia said...
//4 -வது படமும் கடைசி படமும்தான் என்னோட தேர்வு. appreciating the architecutre அதுல நிறையவே இருக்கு. மற்ற படங்களும் அருமை. ஆனா அதில் மற்ற சங்கதிகளும் நிறையவே கலந்து இருக்கு.//

உங்கள் வோட்டினால்.. எல்லாப் படங்களும் தலா ஒரு வோட்டு பெற்றுள்ளது. Pic 2 -க்கு மட்டும் 2 வோட்டுகள். அதனால் அப்படமே ‘வெற்றி' பெருகிறது.. !!!!

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சத்யா..