இங்கு தொடங்கி...
இதுவரைத் தொடரும்..

வாழ்க்கை... ஒரு முடிவில்லா(?) பயணம்.
இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறேன்..
இதுவரை நல்ல பல கருத்துக்களைப் பலர் அளித்துள்ளனர்..
குறிப்பாக ப்ரியா, சூரியன் இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றிருக்கிறார்..
அப்படி மாற்றிப்பார்த்ததில்..

உண்மையாகவே மிகவும் நன்றாக வந்தது. நானும் அவர் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
இதை முதலிலேயே பண்ணியிருக்கலாம்..
கைப்புள்ளையின் தத்துவம் மிக அருமை.. ஆனால் வாழ்க்கை ஒரு முடிவில்லா பயணமா? முடிவுல்ல பயணமா? எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கிறது இல்லையா?
இதே படம் வண்ணத்தில்...

அறுபதுக்கும் மேற்பட்டோர் சும்மா அசத்தியிருக்காங்க.. இதுல நம்மப் படம் எந்த எடத்துல இருக்குதுன்னு தெரியல.. எப்படியிருந்தாலும் இதுவரை வந்தப் பாராட்டுக்களே கொஞ்சம் ஊக்கமளிப்பதாக உள்ளது..