Saturday, June 14, 2008

ஜூன் மாத போட்டிக்கு...Yet another day at work..

கடைசி நேரத்தில்... போட்டி வண்டியைப் பிடிச்சாச்சு...

போட்டியில் பங்கேற்றிருக்கும் மற்றப் படங்களைப் பார்க்கும் போது.. நமக்கு வாய்ப்பு இந்தத் தடவையும் கடினம்தான். இருந்தாலும் முயற்சிசெஞ்சுப்பார்க்கலாம்...


கொக்கின் வேலை.. இரை தேடுதல்..
பொறுமையாக, சரியானத் தருணத்திற்காக காத்திருத்தல்..
அந்த நொடியை.. சரியாகப் பயன்படுத்துதல்..

ஒரு வகையில் கொக்கின் வேலை..நமது அன்றாட வாழ்விற்கும் வேலைக்கும் சரியாகப் பொருந்தும், ஒரு நல்லப் பாடத்தை கற்பிப்பதாக நினைக்கிறேன்.

இந்த மாதத் தலைப்பிற்கும் சரியாகப் பொருந்தும் என நம்புகிறேன்.

இந்தப்படத்தை.. ரொம்ப நேர குழப்பத்திற்குப் பின்..தெரிவு செய்தேன்..சரியாயிருக்குமா?



Yet another day at work..
Originally uploaded by Chumma...



போட்டிக்காக எடுத்த மற்ற படங்கள்...








13 comments:

நந்து f/o நிலா said...

ஹை... நல்லா இருக்குங்க கொக்கு...

சரண் said...

ரொம்ப நன்றிங்க நந்து..

KARTHIK said...

நல்லாருக்கு.

சரண் said...

நன்றி கார்த்திக்.

Mani - மணிமொழியன் said...

முதல் படத்த விட இரண்டாம் படம் போட்டிக்கு பொருத்தமா இருந்திருக்கும்னு தோணுது - tastes differ !

சரண் said...

மணிமொழியன், மீன் பிடிப்பவர் தொழிலாக செய்யாமல் ஏதோ பொழுதுபோக்கிற்காக செய்வதாகப் பட்டது. அதனால் அப்படத்தை தெரிவு செய்யவில்லை.
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி மணி.

சரண் said...

ராமலக்ஷ்மி கூறியது..

“மணிமொழியனை வழிமொழிகிறேன். இரை தேடும் நாரை 'வாயில் மீனுடன்' இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அடுத்த படமும் அதே இலக்கைக் குறி வைத்துதான் என்றாலும், 'கையில் தூண்டிலுடன்' என்பது கூடுதல் பொருத்தம்.
[சூர்யாவுக்கு கடல் மிகவும் பிடித்தமானதோ?]”

(இந்தப் பின்னூட்டம் ஏனோ ஜோடி பதிவில் இருந்தது.)


ராமலக்ஷ்மி,

வாயில் இரையுடன் ஒரு படமும் என்னிடம் இருந்தது. உங்கள் கருத்தும், மணியின் கருத்தும் மிகச் சரியே. என் பதிவில் கூறியிருப்பது போல், நீண்ட குழப்பதிற்கு பின்னரே இப்படத்தை தெரிவு செய்தேன்.
எல்லொரும் எதாவது வேலை செய்யும்போது எடுத்தப் படத்தை அளித்திருக்கும் போது, இந்த கொக்கு ஒண்ணுமே செய்யாமல் இருப்பது போலத்தான் இருக்கிறது.
ஆனால், கொக்கின் அன்றாட வேலையில், இந்த ‘ஒற்றைக்காலில்' காத்திருத்தல் தான் ஏதோ எனக்கு முக்கியமான செயலாகப் பட்டது.
கொஞ்சம் வித்தியாசமாக சிந்திததின் விளைவு இது.
நடுவர்களும் இதே நோக்கில் சிந்தித்தால் இப்படம் கவனிப்பு பெறும். இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கு அடுத்த மாதப்போட்டி.
போட்டியில் வெற்றி பெறுவதை விட, இந்த மாதிரி போட்டிகள் என் புகைப்பட ஆர்வத்தையும், பதிவெழுத ஊக்கத்தயும் தருவதையும், உங்களைப் போன்று நண்பர்கள் கிடைப்பதையும் தான் நான் முக்கியமாக கருதுகிறேன்.

[ஆமாங்க.. கடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் San Diego - வில் கடற்கரைகள் மிகச் சிறப்பு. அதனால் அடிக்கடி கடற்கரை செல்வது வழக்கம்]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நிலா said...

படங்களை விட விளக்கங்கள் இன்னும் சூப்பரா இருக்கு சூர்யா மாமா...

சரண் said...

நிலாக் குட்டி, உனக்கே என்னுடய விளக்கங்கள் புரிஞ்சுருச்சுன்னா.. போட்டி நடத்துற பெருசுங்களுக்கும் புரியும்னு நம்பிக்க வந்துருச்சு!!

ரொம்ப டேங்ஸ்!

ராமலக்ஷ்மி said...

முந்தைய பதிவில் மாற்றிப் பின்னூட்டமிட்டதற்கு மன்னிக்கவும்.
தங்கள் விளக்கத்துக்கும் நன்றி
//நடுவர்களும் இதே நோக்கில் சிந்தித்தால் இப்படம் கவனிப்பு பெறும்.//

இதுவே எல்லோரது எதிர்பார்ப்பும்.

// இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கு அடுத்த மாதப்போட்டி.//

இது ஸ்பிரிட்.

//போட்டியில் வெற்றி பெறுவதை விட, இந்த மாதிரி போட்டிகள் என் புகைப்பட ஆர்வத்தையும், பதிவெழுத ஊக்கத்தயும் தருவதையும், உங்களைப் போன்று நண்பர்கள் கிடைப்பதையும் தான் நான் முக்கியமாக கருதுகிறேன்.//

இதை நானும் ஆமோதிக்கிறேன் சூர்யா.

சரண் said...

ராமல‌ஷ்மி,

உங்கள் ஆதரவான கருத்துக்களுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி.

Iyappan Krishnan said...

http://www.flickr.com/photos/chummafun/2581605518/in/photostream/


i would have chosen this or your second photo instead of the first one.


tho first one is good one but not having enough punch - IMHO

சரண் said...

Jeeves,

http://www.flickr.com/photos/chummafun/2581605518

போட்டி பற்றிக் கேள்விப்பட்டதும், இந்த மாதிரி வேலை செய்பவரின் படம் தான் மனதில் நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் படம் எடுத்தது போட்டிக்கு பங்கேற்க கடைசி நாளன்று. லேட்டாகிப்போச்சு.

கொக்கு, நான் பதிவில் சொல்லியிருப்பது போல், not just submitting a picture where somebody is working, not just literally translating the contest title, I wanna create something abstract and different. But you are right.. the 'punch' is missing. I too felt the same.

வரும் மாதப் போட்டிகளில் பங்கேற்க இந்த முறை கற்ற பாடம் உதவியாயிருக்கும்.

கருத்திற்கு நன்றி.