Saturday, June 21, 2008

பீச் ஓரமா அந்தப்பக்கம்...

ரொம்ப நாளா P & S camera வெச்சுட்டே என்னோட புகைப்படக்கலை ஆர்வத்திற்கு தீனி போட்டுட்டிருந்தேன். இப்பதான் கடைசியா ஒரு SLR வாங்கினேன். Nikon D40: உள்ளதிலேயே விலைக் குறைவான, எடைக்குறைவானதுன்னு சொன்னாங்க.. இதுவர ரொம்ப நல்லாருக்கு..
அதோட 18-55mm லென்சும், 55-200mm லென்சும் (மிகவும் பயனுடயது) கொடுத்தாங்க.

முதலில் வீட்டுகுள்ளாரயும், வீட்டுத்தோட்டத்திலும் அப்படியும் இப்படியும் பிடிச்சதுல 2 படம்..







அப்புறம் போன வாரக்கடைசியில் கடற்கரைக்குச் போயி கால் வலிக்க நடந்து.. கை வலிக்க க்ளிக்கியதுல நல்லாருக்குன்னு நான் நினச்சுதுல்ல ஒரு சிலத.. உங்க பார்வைக்கு...

பிடிச்சிருந்தா.. ஒரு ரெண்டு நல்ல வார்த்த சொல்லீட்டுப்போனீங்கனா சந்தோசமா இருக்குங்க..

பெரிய மனுசங்கெல்லாம் எதாவது குற்றங்கொற இருந்துச்சுன்னா அத சொல்லீட்டுப் போங்க..
நானும் கத்துக்கறங்க..

மகாராசாப் பறவை..
இதுக்கு நான் வெச்சப் பேரு..மகாராசாப் பறவை.. அதென்னமோ இது பறந்து வர தோரணயப் பாத்தா அப்படியே மகாராசா படை பரிவாரங்களோட வலம் வர மாதிரிதான் இருக்கும்..



தைரியசாலி அணில்..
நம்மூர்ல அணில் நம்ம பத்தடிக்கு அந்தப் பக்கம் வந்தாலே பாஞ்சு ஓடிப்போயிரும்.. இங்க நான் பக்கதுலபோயி படம் புடிச்சும் அசராம போஸ் கொடுத்திட்டு இருந்துச்சு..



மணக்கோட்டைஎங்காத்தா அடிக்கடி சொல்லுங்க.. 'வெறும் மனக்கோட்ட கட்டாத.. கட்டாத..' ன்னு.. இங்க குட்டிப்பசங்க மண(ல்)க்கோட்டை கட்டி வெச்சுருக்காங்க.. இதுக்கு என்ன சொல்லுமோ எங்காத்தா..



எங்கூரு அய்யனாரு..
நம்மூர்ல இப்படியொரு பாறை இருந்துச்சுனா கண்டிப்பா அய்யனார் சாமியாக்கி வேல் கம்பெல்லாம் குத்தி, சாமியாடி, கோழியடிச்சு கெடா வெட்டி நோம்பி கொண்டாடியிருப்போம்ல..



குட்டிச் (மணல்) சாமியார்
இந்தப் பொடியன் நம்மூர்ல இல்லாம போய்ட்டாங்க...



50 பைசாப் படம்
நம்ம பங்காளியொருத்தன் நான் இப்படி புல்லயும் பூட்டயும் படம் புடிக்கரதப் பாத்து ‘என்ன 50 பைசா படம் புடிக்க போறியா' -னு கேப்பான். இந்த மாதிரி post card படம் புடிக்கும் போதெல்லம் அதுதான் நெனப்புக்கு வரும்..



பூந்தளிராட..
சின்னப் பசங்க ரெண்டு அழகா சோடி போட்டு சுத்தீட்டிருந்துச்சுங்க.. பன்னீர் புஷ்பங்கள் சோடிக் கணக்கா.. அந்த வயசுல இதெல்லாம் எவ்வளவு சுகம். இல்லீங்களா..?



ஆடியடங்கும் வாழ்க்கை..
இந்த வயசுல நாமெல்லாம் இப்படி இருக்க கொடுத்து வெச்சுருகனுங்க.. இல்லீங்களா..?



எகிறிக்குதித்தேன்..வானம் இடித்தது..
இதுதாங்க.. எனக்கு ரொம்ப பிடிச்ச படம். உங்களுக்கு?




படமெல்லாம் பிடிச்சிருந்துச்சுங்களா?

6 comments:

ers said...

படம் எல்லாம் டாப் டக்கருக்கங்க... டி.40 கேமரா நல்ல ரிசல்ட் தருது. ஆனா சொந்தமாக நானும் இதே வகை காமிரா வாங்கி வச்சிருக்கேன். ஆனா இந்த காமிரா தூங்குதுங்க.

சரண் said...

தமிழ் சினிமா,

எழுப்பிவிடுங்க.. இந்த கேமராவைத் தூங்க விடறது பெரிய பாவங்க..
ஆனா நீங்க நெறயா நடிகைங்க படமெல்லாம் புடிச்சு போடறீங்களே.. அது எந்தக் கேமரா?

ராமலக்ஷ்மி said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சூர்யா. அடுத்தடுத்து இனி வரும் போட்டிகளில் அசத்தப் போறீங்க. துல்லியமான படங்கள்,துடிப்பான கமென்ட்கள். குறிப்பா,//எங்கூரு அய்யனாரு..
நம்மூர்ல இப்படியொரு பாறை இருந்துச்சுனா கண்டிப்பா அய்யனார் சாமியாக்கி வேல் கம்பெல்லாம் குத்தி, சாமியாடி, கோழியடிச்சு கெடா வெட்டி நோம்பி கொண்டாடியிருப்போம்ல..//
ரசித்தேன்.

//இதுதாங்க.. எனக்கு ரொம்ப பிடிச்ச படம். உங்களுக்கு?//

தெரியும் தெரியும். யாருக்குத்தான் பிடிக்காது கடலன்னையை?

சரண் said...

வாழ்த்துக்களுக்கும், ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி ராமல‌ஷ்மி.

துளசி கோபால் said...

அணில் அட்டகாசமா இருக்கு.

சரண் said...

துளசி கோபால்,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!!