Friday, June 27, 2008

அட்றாட்றா நாக்க முக்க..!


விகடனில் வந்த இந்தக் கட்டுரையைப் படித்த பின் தான் “காதலில் விழுந்தேன்” என்ற, இன்னும் வெளிவராத படத்தின், இந்தப்பாடலைக் கேட்டேன்.
சும்மா சொல்லக்கூடாதுங்க, சும்மா பின்னி பெடலெடுத்துட்டாங்க.. பாட்டைக் கேக்கும்போது, சும்மா வேட்டியத் தூக்கிக்கட்டி, நாக்க நல்லா மடிச்சு உள்ள தள்ளி, கும்முன்னு ஒரு குத்தாட்டம் போடனும்னு தோனுதுங்க.. இன்னிக்கு முழுசும் மண்டைக்குள்ள ஒரே ” நாக்க முக்க.. நாக்க முக்க..” தான்னா பாத்துக்கோங்களேன்..


நன்றி: விகடன்

படத்துல 2 விதத்துல இந்த பாட்டு இருக்குங்க.. இன்னும் நீங்க கேக்கலைனா இதோ..

1) ஆண் குரலில், கொஞ்சம் western இசை கலந்து:

Get Your Own Songs Player at Music Plugin

2) சின்னப் பொண்ணு என்ற ‘பொண்ணு' பாடியது, அசல் கிராமியப் பாடல்:

Get Your Own Songs Player at Music Plugin

கொசுறு (எச்சரிக்கை) செய்தி:

இதே படத்துல ”உனக்கென நான்” அப்படினு இன்னொரு பாட்டு.. அப்படியே ரியானா (Rihana) வோட Unfaithful - ன்ற அருமையானப் பாட்ட குத்திக் கொதறி, கொடல உரிச்சு தொங்கப் போட்டிருக்காங்க. ரியானா-வ எனக்கு மாதிரியே உங்களுக்கும் பிடிக்கும்னா தயவுப்பண்ணி இந்தப் பாட்ட கேட்றாதீங்க.

12 comments:

மாயன் said...

பாட்டு ஹிட்டான உடனே ஏற்கனவே ஷூட் பண்ணி வெச்சிருந்ததை தூக்கிப் போட்டுட்டு மறுபடி எக்கச்சக்கமா செலவு பாட்டை மறுபடி ஷூட் பண்ணாங்களாம்... ஆனா இந்த பாட்டு எப்படி ஹிட் ஆச்சுன்னு தெரியலை...

மச்சி படத்துல வர்ற "கொக்கரக்கோ கும்மாங்கோ" மாதிரி பாட்டு இன்னும் வரலை....

சரண் said...

மாயன்,

"கொக்கரக்கோ கும்மாங்கோ" பாடலை விட எனக்கு இந்தப் பாடல்தான் பிடித்திருக்கிறது.

இந்தப் பாடல் ஹிட்டானதிற்கு, IPL 20/20 - யில் திரும்பத் திரும்ப (பொருத்தமானதும் கூட) ஒலித்ததும் ஒரு காரணமாயிருக்குமென்று நம்புகிறேன்.

கருத்திற்கு நன்றி

Thamiz Priyan said...

செம பாட்டு தல... சும்மா சுத்தியடிச்சு ஒரு குத்தாட்டம் போடலாம்... ;)

சரண் said...

தமிழ் பிரியன்,

சரியாச் சொன்னீங்க. செரியான குத்துப்பாட்டு..

நன்றி

கிரி said...

சூர்யா அட்ரா டா டா நாக்க(கு) முக்கா தான் போங்க.... சும்மா இசை தாறு மாறா இருக்குங்க ..

பாட்ட கேட்டா சும்மா ஜிவ்வுன்னு இருக்கு.... எதாவது பார்ட்டி ல மட்டும் இந்த பாட்ட போட்டானுக ..மவனே ..ரணகளம் தான்...செம குத்து பாட்டு

பாட்ட கேட்டாலே சுமா பரபரன்னு இருக்கு

நான் என்னோட கை தொலைபேசியில் இந்த பாட்டை தான் வைத்து இருக்கேன்...

// மாயன் said...
பாட்டு ஹிட்டான உடனே ஏற்கனவே ஷூட் பண்ணி வெச்சிருந்ததை தூக்கிப் போட்டுட்டு மறுபடி எக்கச்சக்கமா செலவு பாட்டை மறுபடி ஷூட் பண்ணாங்களாம்//

வாய்ப்பு இருக்கு..பாட்டு சும்மா பட்டய கிளப்புது

//ஆனா இந்த பாட்டு எப்படி ஹிட் ஆச்சுன்னு தெரியலை...//

செம குத்து பாட்டுங்க.. அது நாள தான்..மற்றும் வேகமான இசை..

இந்த பட்டை என்னோட அம்மா ..இது என்ன பாட்டு கருமம் ..பாட்ட பாரு அதையும் பாருன்னு சொல்லிட்டு இருந்தாங்க..இப்ப அவங்களுக்கே பிடித்து விட்டது..:-))

சரண் said...

கிரி:
//எதாவது பார்ட்டி ல மட்டும் இந்த பாட்ட போட்டானுக ..மவனே ..ரணகளம் தான்...செம குத்து பாட்டு //

பட்டி தொட்டியிலெல்லாம் இப்பவே இந்தப் பாட்டு பட்டைய கெளப்புதாம்ல..

//இந்த பட்டை என்னோட அம்மா ..இது என்ன பாட்டு கருமம் ..பாட்ட பாரு அதையும் பாருன்னு சொல்லிட்டு இருந்தாங்க..இப்ப அவங்களுக்கே பிடித்து விட்டது..//

நம்ம கிராமத்து அம்மா, ஆத்தாக்களுக்கெல்லாம் இந்தப் பாட்டு பிடிச்சிருக்கனும்.. இந்த மாதிரி இசைகளெல்லாம் சினிமா வரதுக்கு முன்னாடி ந்ம்ம கிராமத்துல எல்லோரும் கேட்டதுதான்னு நினைக்கிறேன்.

ஆனா பாருங்க, “சிவாஜி பாட்டெல்லாம் அவ்வளவு அர்த்தத்தோட இருக்கும், இதெல்லாம் என்ன கருமமடா” -ன்னு தான் சொல்லுவாங்க.

SurveySan said...

sema kuththu paattunga.

neenga solra maadhir, naakka madichu aadanum poladhaan irukku :)

சரண் said...

surveysan,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கோவி.கண்ணன் said...

நானும் வானொலியில் கேட்டு இருக்கேன். நீங்க சொல்வது போல் எழுந்து ஆடத்தோன்றும் !
:)

சரண் said...

கோவி. கண்ணன்,

தோன்றதோட விட்றாதீங்க.. எழுந்து ஒரு ஆட்டத்தப்போட்ருங்க..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Anonymous said...

சும்மா பட்டைய கெளப்புதுப்பா. செத்த பொணம்கூட‌ எழுந்து ஆட ஆரம்பிச்சுடும்பா. பெண் பாடகர் ரொம்ப நல்லாவே பாடுறாங்க. வாழ்க தமிழ் குத்து இசை கலை மற்றும் கலாச்சாரம். இதுபோன்ற இசை கலைகளை அழிந்துவிடாமல் பாதுகாத்து மேலும் நிறைய படைப்புகளை சம்பத்தபட்டவர்கள் உருவாக்கி தரவேண்டும். இப்பாட்டை எழுதியது மற்றும் இதற்கு இசை அமைத்தது யார் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.
நன்றி.

சரண் said...

மாசிலா,

//இதுபோன்ற இசை கலைகளை அழிந்துவிடாமல் பாதுகாத்து மேலும் நிறைய படைப்புகளை சம்பத்தபட்டவர்கள் உருவாக்கி தரவேண்டும்.//

மிகச்சரி. அழிந்தும், நசிந்தும் வரும் நம் கிராமியப் பாடல்கள், இந்த மாதிரி பாடல்களின் வெற்றிகளால் மீண்டும் புத்துயிர் பெறும்.

இந்த பாடல், இந்தப் படத்தின் இயக்குனர் பிரசாத் அவர்களால் எழுதப்பட்டு, பி.வி.பிரசாத் அவர்களால் இசையமைக்கப் பட்டுள்ளது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.