PIT போட்டியில் பங்கேற்ற 49 படங்களில் நம்மப் படம் முதல் பத்தில் ஒன்றாக தேர்வாகியிருகிறது..!!!
இந்தப் படத்திற்கு பின்னூட்டம் அளித்த ராமலக்ஷ்மி, துளசி, ஜீவா, Athi, CVR, கிரண், கார்த்திக், சர்வேசன் அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக, CVR-ன் இந்தக் கருத்திற்கு சிறு விளக்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்..
”No clear point to focus..and also shadows dont all that value to the subject..”
எனக்கும் இந்தப் படத்தைத் தேர்வு செய்யும்போது இதேப் போன்ற என்ணம் தான் தோன்றியது..
ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்ததில்,
1) ஒரு சில சிறந்த இயற்கைக் காட்சிப் படங்களில் 'point of focus' இல்லாமலிருந்தும் ரசித்திருக்கிறேன்...
2) மணற்பறப்பில் உள்ள வரிகள் சிறு சிறு நிழல்களிலாலேயே உருவாகியிருக்கிறது..
அந்த வகையில் 'நிழல்' பெருபான்மையாக இல்லாவிட்டாலும் முக்கியமான பங்களித்திருக்கிறது என்று நம்பத்தோன்றியது..
எப்படியோ சிறந்தப் பத்துப் படங்களில் ஒன்றாகத் தேர்வானது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
படத்தைத் தேர்வு செய்த நடுவர்களுக்கு மிக்க நன்றி.. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
Monday, December 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment