Sunday, May 11, 2008

ஜோடி...

மே மாத போட்டிக்கு... ஜோடி என்ற தலைப்பிற்காக இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறேன்.


ஜோடி


இந்தப் படம் Yosemite - யில் எடுக்கப்பட்டது. என்னுடைய நண்பர்களான இந்த ஜோடி என் முன்னால் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் அறியாமல் படம் பிடிக்கப்பட்டது.. அதனால் மிக இயல்பாக வந்திருக்கிறது. இப்படத்தைத் தெரிவு செய்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று.. இதில் உள்ள வண்ண கலவை. பிற்சேர்க்கையில் sepia mode-ல் நன்றாக இருந்தாலும் எனக்கு இந்த வண்ணங்களை இழக்க மனமில்லை. அதனால் எடுத்தபோது இருந்தது போலவே, மிக சிறிய மாற்றங்களுடன் சமர்ப்பிக்கிறேன்.



இது எங்கள் வீட்டுத்தோட்டத்தில் குடியிருக்கும் ஜோடியின் காதல் விளையாட்டு...



Dove's romance..


“Mourning Dove” என்ற கூறப்படும் புறா வகையைச் சேர்ந்தது இப்பறவைகள்.. அவர்களது அன்னியோனத்தை தொந்தரவு செய்யகூடாது என்று தூரத்தில் இருந்து எடுத்ததால் படம் கொஞ்சம் தெளிவாக இல்லை. இரண்டு படங்கள் கொடுக்கலாம் என்றால் இதுவும் கண்டிப்பாக இருந்திருக்கும்.

தனிமை...

ஏப்ரல் மாத PIT போட்டியில் (தனிமை என்ற தலைப்பில்)பங்கேற்று.. முதல் பதினைந்து படங்களில் ஒன்றாக இப்படம் தேர்வானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


Thanimai
Originally uploaded by Chumma...